தேனீர் தயாரிப்பில் தற்போது பல வகையான சுவையில் அநேக ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடிய டீ வகைகள் அறிமுகமாகியுள்ளன. அவற்றுள் கவர்ச்சிகரமான நிறங்களில் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்த 6 வித டீ பற்றின விவரங்களை இங்கு பார்ப்போம்.
* சங்கு புஷ்பம் எனப்படும் பட்டர்ஃபிளை பீ ஃபிளவரில் தயாரிக்கப்படும் ப்ளூ டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் செல்களைப் பாதுகாக்கவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. சருமம், முடி மற்றும் மூளை ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்கின்றன. இந்த டீ இயற்கையாகவே ஒரு காஃபின் ஃபிரி டீ.
* டான்டெலியன் என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுவது எல்லோ டீ. இது கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றும் செயலிலும், உணவின் செரிமானத்துக்கும் உதவி புரியும். மேலும், உடலின் வீக்கங்களைக் குறைக்கவும், மொத்த சரும ஆரோக்கியம் காக்கவும் துணை புரியும்.
* சிவப்பு நிற செம்பருத்திப் பூவை உபயோகித்து தயாரிக்கப்படுவது ரெட் டீ. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியம் காக்கவும், சிறப்பான செரிமானத்துக்கும், உடலின் மொத்த நலனுக்கும் உதவி புரிகின்றன.
* ரோஸ் இதழ்கள் சேர்த்து தயாரிக்கப்படுவது பிங்க் டீ. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது சரும ஆரோக்கியம் காக்கவும், ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து அமைதியான மனநிலை பெறவும் உதவக்கூடிய டீ.
* க்ரீன் டீ இலைகள் சேர்த்து தயாரிக்கப்படுவது மாட்சா டீ. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மெட்டபாலிஸம் சிறந்த முறையில் நடைபெறவும், இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவி புரிகின்றன.
* வெள்ளை நிற டீயிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் மேன்மையடையவும், எடை குறையவும் உதவி புரிகின்றன.
நாமும் நம் டீ நேரங்களை கலர்ஃபுல் ஆக்குவோம்; களிப்புறுவோம்!