ஆயுர்வேத மருத்துவத்தில் வெற்றிலைக்கு முக்கியமான இடம் உண்டு. இந்த பச்சை நிற இலை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதுவும் எதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கிறது. இந்தப் பதிவில் வெறும் வயிற்றில் வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
வெற்றிலையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இது வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது. மேலும், வெற்றிலை வாயுவைக் குறைத்து, அஜீரணத்தை சரிசெய்ய உதவுகிறது.
வெற்றிலையின் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது. இதனால், ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க விட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மிகவும் முக்கியம். வெற்றிடையில் இரு அதிக அளவு நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.
குறிப்பாக, இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வீக்கம் மற்றும் வலியைக் குறைத்து ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
வெற்றிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துகின்றன. இது தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்ய உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இது விரைவில் வயதான தோற்றம், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளைத் தடுத்து, சருமப் பொலிவை அதிகரிக்கிறது.
வெற்றிலை பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான இலை. வெறும் வயிற்றில் வெற்றிலையை சாப்பிடுவது மேலே குறிப்பிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இருப்பினும், அதிகப்படியான வெற்றிலை உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.