ரோஸ்டட் கொய்யாவில் சுவை அதிகரிப்பது மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கின்றன. அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஜீரண சக்தி அதிகரிக்கும்:
ரோஸ்டட் கொய்யாவில் நார்ச்சத்து அதிகம். இது ஜீரண சக்தியை அதிகரிக்கவும் மலச் சிக்கல் நீங்கவும் உதவும். மேலும் இரைப்பை குடல் இயக்கங்களை மேம்படச் செய்து ஜீரண மண்டல உறுப்புகளை இதமடையச் செய்யும்.
2. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்:
ரோஸ்டட் கொய்யாவில் அதிகளவில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் காலநிலை மாறும்போது தொற்று நோய்க் கிருமிகளால் உடலில் உண்டாகும் நோய்களை எதிர்த்து போராட உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
3. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையளிக்கும்:
ரோஸ்டட் கொய்யா ஒரு குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவு. இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி புரிவதால், நீரிழிவு நோயாளிகள் தேர்ந்தெடுக்க ஒரு சிறந்த உணவாகிறது.
4. எடை குறைய உதவும்:
ரோஸ்டட் கொய்யா குறைந்த கலோரி அளவு கொண்ட உணவு. மேலும் இதில் நார்ச் சத்துக்கள் அதிகம். இதை உண்பதால், நீண்ட நேரம் பசி உணர்வு உண்டாகாது. அதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து எடை அதிகரிக்காமல் உடலைப் பராமரிக்க முடியும்.
5.இதய ஆரோக்கியம் காக்க உதவும்:
ரோஸ்டட் கொய்யாவில் பொட்டாசியம் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை உடலின் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவி புரியும். இதன் மூலம் இதயம் நோய்த் தாக்குதலின்றி சீராக இயங்க முடிகிறது.
6. சரும ஆரோக்கியம் மேம்படும்:
இதிலுள்ள வைட்டமின் C மற்றும் லைக்கோபீன் போன்ற சத்துக்கள் ஆன்டி ஸ்ட்ரெஸ் ஏஜென்ட்டாகப் பணி புரிந்து சருமத்தை இளமையாகவும் பள பளப்பாகவும் வைக்க உதவி புரிவதுடன் செல்களை சிதைவடையாமலும் பாதுகாக்கின்றன.
7. இருமல் சளியிலிருந்து விடுபட உதவும்:
வெது வெதுப்பான சூட்டுடன் ரோஸ்டட் கொய்யாவை உட்கொள்ளும்போது பாதிப்படைந்த தொண்டை இதம் பெறுகிறது. சளியினால் உண்டாகும் தொண்டைக் கட்டு குறைய இது ஒரு சிறந்த வீட்டு வைத்திய முறையாகும்.
சரி, கொய்யாப் பழத்தை எப்படி ரோஸ்ட செய்வது?
கொய்யாப் பழத்தை சிறு சிறு வட்ட வடிவ துண்டு களாக்கி மைக்ரோ ஓவனில் வைத்து ஃபிரை பண்ணலாம் அல்லது ஏர் ஃபிரை பண்ணியும் உண்ணலாம். சுவைக்காக சிறிது உப்புத் தூள், மிளகுத் தூள் தூவி சாப்பிடும்போது ஆரோக்கியம் கூடும்.