சைனஸ் பிரச்னையால் அவதியா? அப்போ இந்த ஏழு உணவுகள் உங்களுக்குத்தான்!

7 foods that help to control sinusitis
7 foods that help to control sinusitishttps://www.onlymyhealth.com
Published on

சைனஸ் என்பது மண்டை ஓட்டில் உள்ள காற்று நிரப்பப்பட்ட துவாரங்களைக் குறிக்கிறது. அவை நாசி பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த துவாரங்கள் சளியை உருவாக்கி நாசிப் பாதைகளை ஈரமாக வைத்து நாம் சுவாசிக்கும் காற்றை வடிகட்ட உதவுகிறது. பெரும்பாலான சைனஸ் தொற்றுகள் வைரஸ்களால் ஏற்படுகின்றன. ஆனால், சில சமயங்களில் சைனஸ் பிரச்னைக்கு பாக்டீரியாவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சைனஸ் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) எப்போதும் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில், பல சூழல்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாமல் தானாகவே இந்தப் பிரச்னை குணப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சில சூழ்நிலைகளில், நோய்த்தொற்றின் தீவிரம் மற்றும் ஒருசில காரணங்களின் அடிப்படையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படலாம்.

சைனஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன?

* மூக்கிலிருந்து தடிமனான, மஞ்சள் அல்லது பச்சை நிற சளி வெளிவருதல் மற்றும் மூக்கு ஒழுகுதல்.

* மூக்கில் அடைப்பு அல்லது மூக்கு வழியாக சுவாசிப்பதில் சிரமம்.

* கண்களைச் சுற்றி வலி மற்றும் வீக்கம். கன்னங்கள், மூக்கு அல்லது நெற்றியைச் சுற்றியுள்ள அழுத்தமானது குனியும்போது மோசமாகும் நிலை.

* காதுப் பகுதியில் அழுத்தம், தலைவலி, பற்களில் வலி, வாசனையில் மாற்றம், இருமல், வாய் துர்நாற்றம், சோர்வு மற்றும் காய்ச்சல் ஆகியவை அடங்கும்.

சைனஸ் தொற்றிலிருந்து விடுபட உட்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான 7 உணவுகள்:

மீன் மற்றும் கடல் உணவுகள்: மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருகின்றன. அவை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நாசி வீக்கத்தையும் குறைக்கின்றன.

அடர் இலை கீரைகள்: அடர் இலை கீரைகளில் சைனஸ் பிரச்னையை எதிர்த்து ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் பொட்டாசியம் போன்றவை மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.

சூடான மிளகு: சூடான மிளகில் கேப்சைசின் நிறைந்துள்ளது. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
மில்லியனர்கள் மனோநிலையை அடைவது எப்படி?
7 foods that help to control sinusitis

தேன்: தேன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளுக்கு பிரசித்தி பெற்றது. இது பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது மற்றும் சைனஸ் நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து வரும் தொண்டை புண்களை ஆற்ற உதவுகிறது.

பூண்டு: பூண்டில் அலிசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கும். வைரஸ்களை எதிர்த்துப் போராடும்.

அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் நம் உடலில் உள்ள சளி சவ்வுகளைப் பாதுகாக்கும். அதோடு, இதில் சளியை உடைத்து, சைனஸ் வீக்கத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் மற்றும் என்சைம்களும் நிறைந்துள்ளன.

குதிரைவாலி: குதிரைவாலி நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதிலிருக்கக்கூடிய ஆன்டிபயாடிக் பண்புகள் வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com