மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 7 வகை உணவுகள்!

7 Foods That Improve Mental Health
7 Foods That Improve Mental Healthhttps://www.hcbh.org
Published on

நாம் உண்ணும் உணவு நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நமது மூளையின் குறுகிய மற்றும் நீண்ட கால செயல்பாட்டில் இந்த உணவுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான மூளைக்கான உணவு முறை:

1. கீரைகள், இலைகள், காய்கறிகள்: பசலைக்கீரை, தண்டுக்கீரை, வெங்காயம், புதினா இலைகள், கறிவேப்பிலை, பாசி இலைகள் மற்றும் வெந்தய இலைகளில் லுடீன், ஜீயாக்சாண்டின், வைட்டமின் கே, பீட்டா கரோட்டின், ஃபோலேட், துத்தநாகம், செலினியம் போன்ற மூளைக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தக் கீரைகள் அறிவாற்றல் குறைவை தடுக்க உதவுகினறன.

2. பருப்பு மற்றும் தானிய வகைகள்: எல்லா வகையான பருப்புகளும், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொள்ளு, தட்டைப் பயிறு போன்றவை புரதத்தின் வளமான மூலமாகும். டிரிப்டோபான் நரம்பியக்கடத்திகளை உருவாக்க உதவுகிறது. சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் கிட்னி பீன்ஸ் ஆகியவை டிரிப்டோபனின் சிறந்த மூலமாகும்.

3. புதிய பழங்கள்: அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள், பெர்ரி பழங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. வயது தொடர்பான நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற மனநலப் பிரச்னைகளைத் தவிர்க்க இது உதவும்.

4. தேநீர் மற்றும் காபி: காஃபின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். அளவாக உட்கொள்ளும்போது, காபி மனநிலையை உயர்த்தி, விழிப்பூட்டுகிறது. காஃபின் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

5. கொட்டைகள் மற்றும் எண்ணெய் விதைகள்: கொட்டைகளில் அதிக புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, மேலும் அவை நினைவாற்றலையும் மேம்படுத்துகின்றன. பாதாம், வால்நட் சாப்பிடுவது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தும் அதேவேளையில் மற்ற கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்கும். இருதய நோய், மனச்சோர்வு மற்றும் வகை 2 நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கும்.

6. கொழுப்பு நிறைந்த மீன்: கொழுப்பு நிறைந்த சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளன. இவை இரத்தத்தில் பீட்டா - அமிலாய்டு அளவுகள் குறைத்து நன்மை பயக்கும் நிறைவுறா கொழுப்புகளாக மாறுகின்றன.

7. கருப்பு சாக்லேட்: ஒரு அங்குல டார்க் சாக்லேட் 70 சதவிகித கோகோவைக் கொண்டிருப்பது மூளையின் செயல்பாட்டில் பெரும் நன்மை பயக்கும்.

மூளையை பாதிக்கக்கூடிய சில மோசமான உணவுகள்: சில உணவுகள் மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். நரம்பியல் சிக்கல்களை பல்வேறு நோய்களை உருவாக்கும். மனநிலை மற்றும் நினைவாற்றல் இரண்டையும் பாதிக்கும்.

1. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் சேர்க்கைகள், நிறங்கள், குழம்பாக்கிகள், மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
ATMல் பணம் எடுக்கப்போகிறீர்களா? அதற்கு முன்பு இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!
7 Foods That Improve Mental Health

2. சோடா மற்றும் பிற சர்க்கரை பானங்கள்: இனிப்பு தேநீர், சோடா மற்றும் பிற சர்க்கரை பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு நினைவாற்றல் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாக பிரக்டோஸை உள்ளடக்கிய இந்த பானங்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை சுருங்கச் செய்யலாம்.

3. வெள்ளை ரொட்டி: சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், குறிப்பாக இனிப்பு சுவை இல்லாதவை, அல்சீமர் நோய், இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யலாம்.

4. சிவப்பு இறைச்சி: இதயம் மற்றும் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். பக்கவாதம் அல்லது இருதய நோய்களை ஏற்படுத்தும்.

5. மது: ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர் மனதைக் குழப்பிவிடும். ஏனெனில், ஆல்கஹால் மூளையில் உள்ள தகவல் தொடர்பு பாதைகளை நேரடியாக பாதிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com