பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்களது வாழ்க்கை முற்றிலும் மாறி விடுகிறது. குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் மட்டுமே தாய்மார்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் மட்டும் தான் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தரக்கூடியது. அந்த வகையில் குழந்தை பிறந்த பின் பெண்கள் சாப்பிட வேண்டிய 7 வகையான பழங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
ஸ்ட்ராபெர்ரி அதிக விட்டமின் சி நிறைந்த பழமாக இருப்பதால், புதிதாக அம்மாவானவர்கள் அதிகளவு ஸ்ட்ராபெர்ரி சாப்பிட வேண்டும். மேலும் இதில் நீர்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலின் நீர் மேலாண்மையை சீராக வைத்திருக்க உதவுவதால், பெண்கள் விரும்பும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்கலாம்.
குழந்தை பிறந்த பிறகு அம்மாக்களுக்கு பால் கொடுக்கும்போது ஏற்படும் வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை சமாளிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். அதற்கு தேவையான ஆற்றல் அனைத்தும் சப்போட்டா பழத்தில் அதிகளவில் உள்ளதால் குழந்தை பிறந்த தாய்மார்கள் சப்போட்டாவை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
ப்ளூபெர்ரியில் அதிகளவு சிட்ரஸ் அமிலமும், மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ளும் உள்ளதால் இதன் மூலம் குழந்தைகளுக்கு அதிக ஆண்டி ஆக்சிடென்ட்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால் அதிக அளவில் ப்ளூபெர்ரியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது அம்மாக்களுக்கு அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதற்கு பொட்டாசியம் அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே புதிதாக அம்மாவான பெண்கள் அவசியம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க பச்சை பப்பாளி சிறந்த பழமாகும். இது பால் உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றையும் பெண்களுக்குத் தருகிறது.
அம்மாவின் உடலில் போதுமான ஊட்டச்சத்துக்களுடன் இருந்தால்தான் குழந்தைக்கு அவர்களால் போதுமான ஊட்டச்சத்துக்களைத் தரமுடியும். தாய்ப்பாலில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்திருக்க பரங்கிக்காய் சாப்பிட வேண்டியது அவசியம்.
அவகேடோவில் ஒமேகா -3, ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை உற்பத்தி செய்ய உதவுவதோடு குழந்தைகளுக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும்.
மேற்கூறிய 7 பழங்களும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அனைத்து விதமான சத்துக்களை வழங்கும் என்பதால் அதிக அளவில் தினந்தோறும் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.