தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

Cucumber Health Benefits
Cucumber Health Benefits
Published on

நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சுவைக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்திலும் பங்கெடுக்கின்றன. வெள்ளரிக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் அற்புதமான 7 ஆரோக்கிய நன்மைளை இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆக்ஸிஜனேற்ற பண்புகள்: வெள்ளரிக்காயில் உள்ள ஃபிளாவனாய்டுகள், லிக்னான்கள் மற்றும் ட்ரைடர்பீன்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் உடலில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.

2. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்: வெள்ளரிக்காயில் உள்ள 95 சதவீத நீர், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் உடலை நச்சுத்தன்மையற்றதாக வைத்திருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரிக்காயில் உள்ள அதிக அளவு பாந்தோத்தேனிக் அமிலம் அல்லது வைட்டமின் பி5 முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக விளங்குகிறது.

3. மலச்சிக்கல்: வெள்ளரிக்காயில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், குடல் இயக்கத்தையும், நல்ல பாக்டீரியாக்களையும் அதிகரிக்கின்றன. உடலை நீரேற்றமாக வைத்திருப்பதால் மலத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தியும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

4. எடை இழப்பு: வெள்ளரிக் காயில் கலோரிகள் குறைவாகவும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாகவும் நீரேற்றம் மிகுந்ததாகவும் இருப்பதால் பசியைக் குறைத்து உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?
Cucumber Health Benefits

5. ஆரோக்கியமான சருமம்: வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் உதவி புரிகின்றன.

6. இரத்த அழுத்தம்: வெள்ளரிக்காயில் நல்ல அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன.

7. சர்க்கரை நோய்: வெள்ளரியில் உள்ள சர்க்கரை பீட்டாசின் உடலில் இன்சுலின் உற்பத்திக்கு உதவி,இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு,குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ஆகியவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கின்றன.

வெள்ளரிக்காயை சாலட் வடிவிலோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com