வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?

Banana leaf feast
Banana leaf feast
Published on

யற்கையோடு சேர்ந்த வாழ்வுதான் நமது தமிழர் பண்பாடு என்று பலரும் கூறுவார்கள். ஒருவகையில் இது உண்மைதான். நம்மைச் சுற்றியிருக்கின்ற பசுமைகள் இன்னும் பசுமையாக நிலைத்திருக்கிற மாதிரிதான் நாமும் வாழ்ந்தோம். அது நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அதற்கு நாமும் நன்றியோடு இருந்தோம். அந்த நன்றிக்குப் பரிசாகக் கிடைத்ததுதான் நம் வீட்டு தாத்தா, பாட்டிக்கு அக்காலத்தில் இருந்த உடல் ஆரோக்கியம்.

எதையும் அதனிடம் இருந்து நேரடியாக எடுத்துக்கொண்டு, அதற்குத் தேவையானதை நேரடியாக நாமும் கொடுத்திடணும். இதுதான் நம் பழைய வாழ்க்கை முறை. வாழை இலை என்பது நாம் நினைத்தாலும் நம் வாழ்வில் இருந்து விலக்க முடியாத ஒரு விஷயம்தான்!

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்து போய் பிளாஸ்டிக் இலைகள் எல்லாம் விநோதமாக முயற்சி செய்தாலும் அனைத்தும் வாழை இலை விருந்தை ஒன்றும் செய்ய முடியாது. பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம் என்று எங்கும் வாழை இலை விருந்துமயம்தான்! தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்.

சரி, வாழை இலையிலும் அதில் சாப்பிடும் முறையிலும் அப்படி என்னதான் இருக்கு? சைவமோ அசைவமோ, எதுவாக இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டால் அது எப்பேர்ப்பட்ட வயிற்று செரிமானக் கோளாறையும் சரிபண்ணிவிடும். அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சாப்பாடு வகையெல்லாம் இங்குதான் வைக்கணும்.

இதையும் படியுங்கள்:
பிளாக் காபியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Banana leaf feast

இலையின் மேல் பக்கம், `தொடு கறி' என்பது. இடப்பக்கம், அப்பளம். முதலில், இலையை எப்படிப் போடுவது? குறுகின பக்கம் இடது கைக்கு வர வேண்டும். சாதத்தைத்தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதற்குத்தான் இந்த அமைப்பு!

சாப்பிட்ட வாழை இலையை உள்பக்கமாக மடிச்சா உறவு நீடிக்கும். வெளிப்பக்கமாக மடிச்சா உறவு முறியும் என்று சொல்வது பழங்கால நம்பிக்கை. பந்திகளில் எதிரெதிர் பக்கமாக உட்கார்ந்திருப்போம். வெளிப்பக்கமாக மடிக்கும்போது நாம் சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லும் `பொதுவெளி நாகரிகம்'தான் அது! நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வைத்து கற்றுக்கொடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com