கொய்யா ஜூஸில் இருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

கொய்யா பழ ஜூஸ்
கொய்யா பழ ஜூஸ்
Published on

டலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்களை வழங்குவதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன. வெவ்வேறு வகையான பழங்களில் வெவ்வேறு வகையான ஊட்டச் சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. இதில், சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய கொய்யாப் பழத்தை அதன் இனிப்பு சுவைக்காகவும் அதில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துகளுக்காகவும் பலரும் விரும்பி உட்கொண்டு வருகின்றனர். இப்பழம் மட்டுமின்றி, கொய்யா மரத்தின் இலைகளும் பட்டைகளும் கூட அதிக ஊட்டச்சத்து நிறைந்தவைகளாகவும் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணமுடையவைகளாகவும் உள்ளன. கொய்யாப் பழத்தில் ஜூஸ் செய்து அருந்துவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கொய்யா பழ ஜூஸில் வைட்டமின் C அதிகம் உள்ளது. அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து சாதாரண உடல் நலக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவும். சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் செய்யும்.

2. இந்த ஜூஸில் வைட்டமின் A, E மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உண்டாகும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, ஃபிரீரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்த உதவி புரியும். இதனால் நாள்பட்ட வியாதிகள் வரக்கூடிய வாய்ப்பு குறையும்.

3. இதிலுள்ள பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறையச் செய்யும். நார்ச் சத்துக்கள் அதிகப்படியாக உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியம் காக்க உதவும்.

4. கொய்யா பழ ஜூஸ் குறைந்த கலோரி அளவு கொண்டது. இதில் டயட்டரி ஃபைபர் அதிகம் உள்ளது. இது அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து மேலும் மேலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்தும். இதனால் உட்கொள்ளும் கலோரி அளவு குறைந்து எடையை சமநிலையில் பராமரிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
பெண்களை விட ஆண்களுக்கு ஏன் நிற குருட்டுத்தன்மை அதிகம் தெரியுமா?
கொய்யா பழ ஜூஸ்

5. இதிலுள்ள நார்ச்சத்துக்கள், சர்க்கரைச் சத்து உடலுக்குள் உறிஞ்சப்படும்போது கால தாமதத்தை உண்டுபண்ணி இரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்கச் செய்யும். இது சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சமநிலையில் வைக்க உதவும்; மற்றவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் உதவும். மலச் சிக்கல் நீங்கவும் சிறப்பான செரிமானத்துக்கும் நார்ச் சத்து உதவி புரியும்.

6. கொய்யா ஜூஸில் உள்ள வைட்டமின் A சத்து பார்வைத் திறனை அதிகரிக்க உதவும். மூத்த குடி மக்களுக்கு வயதானதின் காரணமாக உண்டாகும்  மாகுலர் டீஜெனரேஷன் மற்றும் கேட்டராக்ட் போன்ற குறைபாடுகள் உண்டாகும் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.

7. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலிகளைக் குறைக்கவும் கொய்யா ஜூஸ் உதவும்.

கொய்யா பழத்தில் வெள்ளை, பிங்க் என இரண்டு வகை உண்டு. கொய்யா இலைகளில் டீ போட்டும் அருந்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com