
மாசடைந்த உணவை உட்கொள்வது, இரவில் வெகு தாமதமாக டின்னர் எடுத்துக்கொள்வது போன்ற பல வகையான காரணங்களால் நம் வயிற்றில் வீக்கம், அஜீரணம், குமட்டல், எரிச்சல் போன்ற பல அசௌகாரியங்கள் ஏற்படுவதுண்டு. வயிறு, கோளாறேதுமில்லாமல் நார்மல் நிலைக்குத் திரும்ப நாம் அருந்த வேண்டிய 7 இயற்கை முறையிலான பானங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ச்சாஸ் (Chaas) எனப்படும் மசாலா மோர்: இதில் ஆரோக்கியமான பாக்ட்டீரியாக்கள் அதிகம் உள்ளன. இவை ஜீரண மண்டல உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவி புரிபவை. மோரில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் இஞ்சிப் பேஸ்ட் ஆகியவை சேர்த்துக் கலந்து இந்த மோரை தயாரிக்கலாம்.
2. லெமன் - ஹனி வாட்டர்: இது வயிற்றிலுள்ள அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை நன்கு உடைத்து, அவை நல்ல முறையில் செரிமானமாக உதவி புரியும். மேலும் குமட்டல் போன்ற அசௌகாரியங்களை நீக்கவும் உதவி புரியும் இந்த பானம்.
3. ஆம் பன்னா: பச்சை (Raw) மங்காயுடன் ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது இந்த ஜூஸ். இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி வைரல் மற்றும் ஆன்டிபாக்ட்டீரியல் குணங்கள் கொண்டது.
4. சின்னாமன் டீ (Cinnamon Tea): இந்த டீ ஜீரணத்துக்கு உதவக்கூடிய என்ஸைம்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். மேலும் வயிற்றின் உள் பகுதியை சாந்தப்படுத்தி கோளாறுகள் நீங்கவும் உதவி புரியும்.
5. தேங்காய் தண்ணீர் (இளநீர்) : இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், எலக்ட்ரோலைட்கள் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை வயிற்றின் உள் பகுதி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
6. பெப்பர்மின்ட் டீ: இது ஜீரண மண்டல உறுப்புகளின் பாதையில் உள்ள தசைகளை தளர்வுறச் செய்யும். மேலும், தசைப் பிடிப்பு, வாய்வு மற்றும் வீக்கம் போன்ற கோளாறுகளை குணப்படுத்தவும் உதவி புரியும்.
7. ஆலூவேரா ஜூஸ்: இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. மேலும் வயிற்றுக்குள் உண்டாகும் எரிச்சலை குணப்படுத்தவும் இந்த ஜூஸ் உதவி புரியும். இதன் மூலம், இழந்த ஜீரண சக்தியை மீட்டெடுக்க முடியும். உங்களுக்கு வயிற்றுப் பிரச்சினை ஏற்படும்போது மேற்கூறிய பானங்களில் ஒன்றை தயாரித்து அருந்தி குணம் பெறுங்கள்.