நீங்கள் அதிகப்படியாக சர்க்கரை சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள்!

Sugar
7 Signs You're Eating Too Much Sugar!
Published on

சர்க்கரை என்பது நமக்குப் பிடித்த பல உணவுகள் மற்றும் பானங்களில் சேர்க்கப்படும் முக்கிய மூலப் பொருளாக உள்ளது. இதை குறைவாக சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்தப் பதிவில் ஒரு நபர் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறார் என்பதற்கான 7 அறிகுறிகளைப் பார்க்கலாம். 

1. எடை அதிகரிப்பு: ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறார் என்பதற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை அதிகமாக உட்கொள்வதால் உடலில் அதிக கலோரி சேர்ந்து உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். உடலுக்கு தேவையான கலோரிகள் போக மீதம் இருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படும்.‌ 

2. அடிக்கடி சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஆசை: சர்க்கரையில் அடிமையாக்கும் பண்புகள் உள்ளன. அவை தீவிர பசிக்கு வழிவகுக்கும். நீங்கள் தொடர்ந்து அதிகமாக இனிப்பு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அதிகமாக சர்க்கரை உட்கொள்கிறீர்கள் என அர்த்தம். அதிக சர்க்கரை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனின் சமநிலையை மோசமாக்கி அடிக்கடி பசியை தூண்டிவிடும். 

3. சோர்வு: என்னதான் சர்க்கரை சாப்பிடுவதால் உடனடியாக ஆற்றல் கிடைத்தாலும், அதிகபடியாக சர்க்கரை உட்கொள்வது ஆற்றல் குறைவுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், சர்க்கரையானது ரத்த சர்க்கரையின் அளவை விரைவாக உயர்த்தி சோர்வை ஏற்படுத்தும். திடீரென உயரும் ரத்த சர்க்கரை அளவு காரணமாக உடல் எப்போதும் அசதியாக இருக்கும். 

4. தோல் பிரச்சனைகள்: அதிகப்படியாக சர்க்கரை சாப்பிடுவது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி முகப்பரு, தோல் அலர்ஜி போன்ற சரும நிலைகளை மோசமாக்கும்.‌ மேலும், சர்க்கரையானது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை சேதப்படுத்துவதால், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதற்கு பங்களிக்கும். இது முக சுருக்கங்கள் மற்றும் தோல் தொய்வை ஏற்படுத்தி, சருமத்தை மோசமாக பாதிக்கும். 

5. பல் பிரச்சினைகள்: பல் சொத்தைக்கு சர்க்கரை ஒரு முக்கிய காரணமாகும். சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும்போது அது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளித்து பல் சொத்தையை ஏற்படுத்தும். இதனால் பல் உணர்திறன் குறைவு, துவாரங்கள் மற்றும் ஈறு நோய்களும் கூட ஏற்படலாம். 

6. மனநிலை மாற்றங்கள்: அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு விரைவாக உயர்த்து மனநிலையை பாதிக்கக்கூடும். சர்க்கரை உணவுகளை சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு விரைவாக உயர்ந்து, மீண்டும் விரைவாக குறைகிறது. இது எரிச்சல், மனநிலை மாற்றங்கள் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தும். இது உங்களது உற்பத்தி திறனை ஒட்டுமொத்தமாக பாதித்து மனநிலையை எதிர்மறையாக மாற்றக்கூடும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக் காரணமான 7 வகை உணவுகள்!
Sugar

7. நாள்பட்ட நோய்கள்: அதிக சர்க்கரை உட்கொள்வதால் உடற்பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகம். எனவே அதிகமாக சர்க்கரை உட்கொள்வதை குறைத்து சீரான உணவை பின்பற்றுவதன் மூலம் நாள்பட்ட நோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம். 

அதிகமாக சர்க்கரை உட்கொள்வதன் அறிகுறிகளை அறிந்திருப்பது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கிய. இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக அதிகமாக சர்க்கரை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை இயற்கையான இனிப்புகள் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு என்றும் ஆரோக்கியத்துடன் இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com