டயாபெட் என்னும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு படாதபாடு படுவதைப் பார்க்கிறோம். சில வகை உணவுகளின் மறைமுகத் தாக்குதலை அறியாமலே அவற்றை உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவை உயர்த்திக்கொள்ளும் சூழ்நிலையும் உண்டு. அப்படிப்பட்ட 7 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கெட்சப் (Ketchup): கெட்சப் ஒரு உப்பான உணவு என நாம் நினைக்கிறோம். ஆனால், இரண்டாவது கூட்டுப் பொருளாக அதில் இனிப்பும் சேர்க்கப்படுவதுண்டு.
2. பால்: இனிப்பு சேர்க்கப்படாதது என்று சொல்லப்படுகிற சோயா பாலிலும் அதிகளவு புரோட்டீனுடன் சிறிதளவு இனிப்புச் சத்தும் உள்ளது. இதுவும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
3. துரித உணவு: ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் இவ்வகை உணவுகளில் உள்ள சர்க்கரையும் கார்போஹைட்ரேட்களும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக் கூடியவையே.
4. உருளைக் கிழங்கு: இதன் மென்மைத் தன்மையால், சீக்கிரமே செரிமானமாகி உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது. அதிலும் சர்க்கரைச் சத்து இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு உயரும்.
5. ஒய்ட் பாஸ்தா: இது சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவில் தயாரிக்கப்படுவது. இதிலுள்ள கார்போஹைட்ரேட்கள் சுலபமாக செரிமானமாகி, அதிலும் சர்க்கரை உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும் உட்கொள்ளும் உணவின் அளவை அதிகரிக்கச் செய்யவும் வாய்ப்பளிக்கும்.
6. ஒயிட் ரைஸ்: வெள்ளை அரிசி சாதத்தை அடிக்கடி அல்லது அதிகளவில் உண்பதும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
7. பேகெல் (Bagel): இந்த உணவின் பாக்கெட்களில், ‘கொழுப்பு அற்றது’ அல்லது ‘குறைந்த அளவு கொழுப்புடையது’ போன்ற லேபிள்கள் காணப்பட்டாலும் இவையும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக் கூடியவை.
எனவே, மேலே கூறப்பட்ட 7 வகை உணவுகளைத் தவிர்த்து அல்லது குறைத்து உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த முயற்சிப்போம்.