இஞ்சி டீ அருந்துவதால் கிடைக்கும் 7 சூப்பர் பலன்கள்!

7 Super Benefits of Ginger Tea
7 Super Benefits of Ginger Tea
Published on

ஞ்சி டீ இது இப்பொழுது எல்லா கடைகளிலும் சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. ஆனாலும், நம் வீட்டிலேயே அதை தயார் செய்து சுகாதாரமாக சாப்பிடலாம். ருசியில் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் இஞ்சி டீ எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிய 7 பலன்களைப் பார்ப்போம்.

1. நோய் எதிர்ப்பு சக்தி: இஞ்சி என்றாலே நோய் எதிர்ப்பு சக்திக்கு பெயர்போனது. இதை கொரோனா காலத்தில் பலரும் உணர்ந்திருக்கக் கூடும். பலரும் கொரோனாவிலிருந்து விலகி இருக்க, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இஞ்சியை பயன்படுத்தினர்.

2. குமட்டலைத் தடுக்கிறது: பயணத்திற்கு முன்னர் ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது, இயக்க நோயுடன் தொடர்புடைய குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்க உதவும். எனவே, நீண்ட பயணம், டிராவல் ஒத்துக்கொள்ளாதவர்கள் இஞ்சி டீ ஒரு கிளாஸ் குடித்தால் எல்லாம் பறந்து போகும்.

3. வயிற்றுக்கு நல்லது: நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை எளிதில் உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை தூண்டுவதற்கும் இஞ்சி உதவுகிறது. இதனால் வயிற்று வலி, வயிறு மந்தம் இருக்காது.

4. வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை மற்றும் மூட்டு பிரச்னைகளுக்கு சிறந்த வீட்டு மருந்தாக இருக்கிறது.

5. சுவாசப் பிரச்னைகள்: இஞ்சி தேநீர் ஜலதோஷத்தால் உண்டாகும் சுவாசப் பிரச்னையை போக்க உதவுகிறது. சுற்றுச்சூழல் ஒவ்வாமைகளுடன் தொடர்புடைய சுவாச அறிகுறிகளுக்கு ஒரு கப் இஞ்சி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி, செம்பு பாத்திரங்களின் ஆரோக்கிய குணம் தெரியுமா?
7 Super Benefits of Ginger Tea

6. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்: இஞ்சி தேநீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. இது இதய பிரச்னைகள் வருவதை குறைக்க உதவும். மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும். தமனிகளில் கொழுப்பு படிவதை இஞ்சி தடுக்கிறது.

7. மாதவிடாய் பிரச்னை: மாதவிடாய் வலியால் அவதிப்படும் அனைத்து பெண்களுக்கும் இது உதவியாக இருக்கும். சூடான இஞ்சி தேநீர் வலியைப் போக்கவும் தசைகளை தளர்த்தவும் உதவும்.

8. மன அழுத்தத்தைப் போக்கும்: இஞ்சி டீ உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும். மனம் புத்துணர்ச்சி பெறுவதால் மன அழுத்தம் தானாகவே குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com