கால்சியம் சத்தை அதிகரிக்கும் 7 வகை பானங்கள்!

Calcium-rich drinks
Calcium-rich drinks
Published on

லும்பு ஆரோக்கியம் மற்றும் நரம்பு சிக்னல்களை சிறப்பாகக் கொடுக்கவும் தசைகளின் இயக்கத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் முக்கியமான மினரலாகும். கால்சியம் சத்து குறைபாடு ஒருவருக்கு எண்ணற்ற தீமைகளை ஏற்படுத்தும் என்பதால் கால்சியத்தை அதிகரிக்கும் 7 வகை பானங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பால்: பசும்பாலில் ஒரு கப்பில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் காலை, மாலை என இரு வேளைகளிலும் இதைப் பருக தசைகள், எலும்புகள் மற்றும் நரம்புகள் அனைத்தும் பலம் பெறும்.

2. பாதாம் பால்: பாதாம் பாலில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, தாவர அடிப்படையிலான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. ஒரு கப் பாதாம் பாலில் 450 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், காலை உணவுடன் சேர்த்து சாப்பிட, நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.

3. சோயா பால்: 100 கிராம் சோயா பாலில் 25 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் இதை காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாள் முழுமைக்கும் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். சோயா, சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் மட்டும் இந்தப் பாலை தவிர்க்கலாம்.

4. யோகர்ட் ஸ்மூத்தி: ஒரு யோகர்ட் மற்றும் ஒரு பவுல் பழங்களில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளதால்  யோகர்டை வைத்து செய்யப்படும் ஸ்மூத்திகளில் அதிகளவில் ப்ரோபயோடிக்குகள் உள்ளன. இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதை காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ளும்போது, அது  குடல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

5. அரிசி பால்: ஒரு கப் அரிசி பாலில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் இது பாலுக்கு சிறந்த மாற்று உணவு ஆகும். தாவர அடிப்படையிலான கால்சியம் சத்துக்கள் வேண்டும் என்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. அரிசி பாலில் அடர்த்தி குறைவு, பால் விரும்பாதவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.

6. பாலக்கீரை ஸ்மூத்தி: ஒரு கப் பாலக்கீரையில் 250 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் இந்த ஸ்மூத்தியை தயாரிக்க பாலக்கீரை, வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் ஆகியவை தேவை. இதை நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் அல்லது உடற்பயிற்சிக்கு பின்னர் பருகுவதால், உடலுக்குத் தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்களைக் கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
மகாவிஷ்ணு கையில் சுழலும் சுதர்சன சக்கரத்தின் பெருமைகள்!
Calcium-rich drinks

7. சியா விதை பானம்: சியா விதைகளில் கால்சியம் சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதோடு, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதை நீங்கள் மதிய உணவுக்கு முன்னர் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வதால், இந்த பானம் புத்துணர்ச்சியைத் தரும்.

வயது வந்தோருக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் தேவை. எனினும், 50 வயதைக் கடந்த பெண்களுக்கும், 70 வயதைக் கடந்த ஆண்களுக்கும், 1200 மில்லி கிராம் தேவைப்படும் என்பதால் அதற்கேற்ற வகையில் மேற்கூறிய ஏழு வகை பானங்களைக் குடித்துப் பயன்பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com