கண் பார்வையை கூர்மையாக்கும் 8 அற்புத மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்!

Eye Sight
Eye Sight
Updated on

கண்கள், நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. உலகை நாம் ரசிக்கவும், அழகை உணரவும் கண்களே நமக்கு உதவுகின்றன. காலம் மாறும்போது, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ள இந்த காலத்தில், கண்களின் ஆரோக்கியத்தை கவனிப்பது ரொம்ப முக்கியம். எனவே கண் ஆரோக்கியத்திற்கு உதவும் 8 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மஞ்சள் (Turmeric): மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். இதில் குர்குமின் (Curcumin) என்ற பொருள் உள்ளது, இது கண் நோய்களைத் தடுக்க உதவும். மஞ்சள் கண் வறட்சியை குறைக்கவும், கண் வீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும். 

2. குங்குமப்பூ (Saffron): குங்குமப்பூ விலை உயர்ந்த மசாலாப் பொருள் என்றாலும், இது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வயதான காலத்தில் ஏற்படும் மாகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration) போன்ற கண் நோய்களை தடுக்க உதவும்.

3. மிளகு (Black Pepper): மிளகு வெறும் காரத்திற்காக மட்டும் இல்லை, இது கண் பார்வைக்கும் நல்லது. மிளகில் பைப்பரின் (Piperine) என்ற பொருள் உள்ளது, இது மஞ்சளில் உள்ள குர்குமின் சத்தை உடல் முழுமையாக உறிஞ்ச உதவிடும். மிளகு கண் நரம்புகளை பலப்படுத்தி, பார்வையை தெளிவாக்கும்.

4. பெருஞ்சீரகம் (Fennel Seeds): பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு மட்டுமல்ல, இது கண்களுக்கும் நல்லது. பெருஞ்சீரகத்தில் வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கண் அழுத்தத்தை (Eye Strain) குறைக்கவும், கண் எரிச்சலை தணிக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
திரிபலா - திரிகடுகம் இரண்டும் ஆரோக்கியத்தின் அச்சாணிகள்!
Eye Sight

5. திரிபலா (Triphala): திரிபலா என்பது மூன்று மூலிகைகள் கலந்த ஒரு ஆயுர்வேத மருந்து - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய். திரிபலா கண் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து. இது கண் பார்வையை மேம்படுத்தவும், கண் புரை (Cataract) போன்ற நோய்களை தடுக்கவும் உதவும்.

6. நெல்லிக்காய் (Amla): நெல்லிக்காய் வைட்டமின் C சத்தின் சிறந்த மூலம். வைட்டமின் C கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. நெல்லிக்காய் கண் சிவத்தல், கண் எரிச்சல் மற்றும் மாகுலர் டீஜெனரேஷன் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும்.

7. வசம்பு (Calamus): வசம்பு ஆயுர்வேத மருத்துவத்தில் கண் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை. வசம்பு கண் பார்வை குறைபாடு, கண் வலி மற்றும் கண் தொற்று போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். வசம்பை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடுவது அல்லது வசம்பு கலந்த நீரை கண்களை கழுவ பயன்படுத்தலாம்.

8. செம்பருத்தி (Hibiscus): செம்பருத்தி பூ கண்களுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு அற்புதமான மூலிகை. செம்பருத்தி டீ குடிப்பது கண் எரிச்சல், கண் வறட்சி மற்றும் கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
கைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை மற்றும் மூலிகை வழிமுறைகள்!
Eye Sight

இந்த 8 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இயற்கை வைத்தியங்கள். இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், கண் நோய்கள் வராமல் தடுக்கலாம் மற்றும் உங்கள் கண் பார்வையை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com