கைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை மற்றும் மூலிகை வழிமுறைகள்!

Natural and herbal remedies to keep hands healthy!
Beauty tips
Published on

1 சரியான உணவு உட்கொள்ளவும். இயற்கையான புதிதாக இருக்கும் உணவுகளை தேர்வு செய்யவும். பலவகை பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்.

2 தினமும் குறைந்தது 6 தம்ளர் தூய்மையான தண்ணீர் குடிக்கவும். இது நம்முடைய சருமம் உள்ளும் வெளியும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.

3  உடலுக்கு தேவையான தூக்கத்தை உறுதிசெய்யவும் முழுமையான ஓய்வு நம்முடைய  உடலுக்கு அவசியம்.

4 சன்ஸ்கிரீன் அல்லது பாதுகாப்பு உடைகளை அணியவும். அதிகப்படியான சூரிய ஒளி தாக்கம் தவிர்க்கவும். சிறிது சூரிய ஒளி உடலுக்கும் மனதுக்கும் தேவையாக இருக்கிறது.

5 மிதமான சவர்க்காரங்களைப் பயன்படுத்தி கை கழுவவும். மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீரையும் கடுமையான சவர்க்காரங்களையும் தவிர்க்கவும். நம் உடலின் சாதாரண செயல்பாடுகள் வாயிலாக வியர்வை மற்றும் கொழுப்பு சுரப்பிகள் நஞ்சுகளை நீக்கும்.

6  கைகளைக் காப்பாற்ற அழுத்தமுள்ள பொருட்களுக்கு ஆளாகும்போது, எப்போதும் ஈரப்பசை க்ரீம்கள், சன்ஸ்கிரீன் அல்லது பொருத்தமான கை ரகங்களை பயன்படுத்தவும்.

7 தொடர்ந்து செய்யவேண்டிய செயல்களில் ஈடுபடும்போது,  விரல்கள், மணிக்கட்டுகள், கைகள் மற்றும் கைப்பிடிகளை நீட்டித்து அசைத்து பார்க்கவும். இது சாதாரண இயக்க வரம்பை பராமரிக்க உதவும்.

இயற்கை மற்றும் மூலிகை கை கழுவி

மில்கி வேய் (milky Way)

நீங்கள் சமையலறையில் இருக்கும்போது, லிக்விட் டிஷ் டெட்டர்ஜென்ட் பயன்படுத்துவதற்குப் பதிலாக ¼ கப் (60 மிலி) பால், புளித்தபால், மோர் அல்லது க்ரீம் கொண்டு கைகளை கழுவி பார்த்தால், ஆச்சரியமாக இனிமையான அனுபவமாக இருக்கும். நீக்க முடியாத எண்ணெய் பொருட்களை அகற்ற, மக்காசோள மாவு அல்லது ஓட்ஸ்போல ஒரு எக்ஸ்ஃபோலியேட்டரை முயற்சி செய்யலாம். அதிக அழுத்தம் தேவையில்லை அதன் துகள்மயமான அமைப்பு, மேல்மட்டத் தோலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி, கீழுள்ள புதிய  செல்களை உற்சாகப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் அழகை மேம்படுத்தும் எளிய இயற்கை வழிமுறைகள்!
Natural and herbal remedies to keep hands healthy!

அழுக்கு  கை களுக்கான சோப்பு மாற்று

எப்போதும் தயாராக  வைத்திருக்க கூடிய ஒரு தொகுப்பு.

கூறுகள்:

1 கப் (250 மில்லி) மக்காசோள மாவு அல்லது ஓட்ஸ் (நன்கு அரைத்தது)

2 கப் (500 மில்லி) வெள்ளை கேலின்(kaolin) கிளே (நன்கு பொடியாக அரைத்தது)

¼ கப் (60 மில்லி) பாதாம்  (துகளாக  இருக்கும் வகையில் நன்கு அரைத்தது)

½ கப் (30 மில்லி) உலர்ந்த லாவெண்டர் பூக்கள் (பொடியாக அரைத்தது)

¼ கப் (30 மில்லி) உலர்ந்த ரோஜா இதழ்கள் ( பொடியாக அரைத்தது) விரும்பினால் சில சொட்டுகள் எஸன்சியல் எண்ணெய்கள்,  சிறிதளவு பொடியாக்கப்பட்ட வைட்டமின் C , 400 IU வைட்டமின் E காப்ஸ்யூலில் உள்ள திரவம் (விரும்பினால்)

செய்முறை:

எல்லா கூறுகளையும் ஒரு கிண்ணத்தில் நன்கு கலக்கவும்.  கலவையை பெரிய பாட்டிலில் ஊற்றி, உலர்ந்த மற்றும் குளிரான இடத்தில் சேமிக்கவும்.

பயன்பாடு:

1 அல்லது 2 டீஸ்பூன் (5–10 மில்லி) தூள்மாவை தண்ணீருடன் கலக்கவும். கைகளால் வட்டவடிவமாக மசாஜ் செய்து பேஸ்ட் போல மாற்றவும். பின்னர் அந்த பேஸ்டை விரல்கள் மற்றும் கை மேல் பகுதியிலும் நன்கு தடவவும்.

குளிர்ந்த அல்லது லேசான சூடான தண்ணீரால் கழுவி, மெதுவாக துடைத்துச் சுத்தப்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
டீன் ஏஜ் பெண்கள் - கல்லூரி மாணவிகள் டெனிம் ஸ்கர்ட்களை ஏன் விரும்புகிறார்கள்?
Natural and herbal remedies to keep hands healthy!

எச்சரிக்கை:

இந்த செய்முறை வெட்டுபட்ட இடத்திலோ அல்லது  பாதிக்கப்பட்ட தோலில் பயன்படுத்தும்போது எரிச்சல் ஏற்படுத்தக்கூடும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி  கரங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com