குளிர்காலத்தில் உடலுக்கு அதிகமாக உடற்பயிற்சி இல்லாததும், அதிகமாக உணவு எடுத்துக்கொள்வதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். குளிர்காலத்தில் உடலில் அதிகமாக ஸ்ட்ரெஸ் உருவாகும். இதனால், கார்ட்டிசால் என்னும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உடலில் அதிகரிக்க சுரக்கிறது. இது இன்சுலின் சுரப்பை குறைப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே, குளிர்காலத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தினமும் தவறாமல் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியமாகும். இரத்த சர்க்கரை அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தினமும் காண்காணிப்பது மிகவும் அவசியமாகும்.
2. உடலை எப்போதும் சூடாக வைத்துக்கொள்வது நல்லது. வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது, சூடாக டீ அருந்துவது என்று குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
3. குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் காலை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். குளிர்காலத்தில் அதிகமாக நோய்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், கால்களை சுத்தமாக பேணிப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
4. அதிகமான குளிர்ச்சியின் காரணமாக இன்சுலின் மருந்து செயலிழந்து போக வாய்ப்பிருக்கிறது. எனவே, இன்சுலின் பயன்படுத்துபவர்கள் அதை Room temperature ல் வைத்துக்கொள்வது சிறந்ததாகும்.
5. கண்டிப்பாக குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். வீட்டிலேயே படி ஏறுவதும், இறங்குவதும், பொருட்களை தூக்குவது போன்ற வேலைகளை செய்து உடலை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது சிறந்தது. யோகா, ஷூம்பா போன்ற பயிற்சிகளை செய்து மனதையும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளலாம்.
6. குளிர்காலத்தில் மனதையும், உடலையும் ஆரோக்கியமாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் ஸ்ட்ரெஸ் அதிகமாக ஏற்படுவதுக் கூட இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
7. குளிர்காலத்தில் உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதோ அல்லது அதிக உடல் உழைப்பு இல்லாத காரணத்தாலோ சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, உணவு உண்ணும் முறையில் மாற்றம் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குளிர்காலத்தில் தண்ணீர் அதிகமாகக் குடிக்க தோன்றாது. இருப்பினும், உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதற்கு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியமாகும். இந்த டிப்ஸையெல்லாம் ட்ரை பண்ணி குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.