செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க உதவும் 8 நொதி உணவுகள்!

ராகி கூழ்
ராகி கூழ்https://www.youtube.com

ன்றைய பரபரப்பான சூழலில் ஒவ்வொரு நபருக்கும் வயிற்றில் பிரச்னையின்றி வாழ்க்கையை ஓட்டுவது பெரும் சவாலாகவே உள்ளது. உண்ணும் உணவு சுலபமாக செரிமானமாகி சக்தியாய் மாறுவதற்கு நம் முன்னோர்கள் கடைபிடித்த வழிமுறைகள் அற்புதமானவை. அவற்றைப் பின்பற்றி சில உணவுகளை நொதிக்கச் செய்து உண்ணும்போது சத்துக்களும் கூடுகின்றன; செரிமானக் கோளாறுகளும் தவிர்க்கப்படுகின்றன. இந்தியாவில் அவ்வாறு நொதிக்கச் செய்து உண்ணும் புகழ் பெற்ற எட்டு உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

* ஜீரணத்துக்கு உதவக்கூடிய ஜீரகம் மற்றும் புதினா இலைகளுடன் உப்பும் சேர்த்து தயாரிக்கப்படுவது மோர் என்னும் நீராகாரம். இது தயிரில் தேவையான அளவு தண்ணீர் கலந்து செய்யப்படுவது. இதை அருந்துவதால் உடல் நீரேற்றத்தோடு, குளிர்ச்சியும் பெறும்.

* கஞ்சி என்பது வட இந்தியாவில் ஹோலி பண்டிகையின்போது அனைவராலும் உட்கொள்ளப்படுவது. புரோபயோடிக்ஸ் நிறைந்த ஆரோக்கியமான பானம் இது. பிளாக் கேரட், பீட்ரூட் துண்டுகளுடன் பொடித்த கடுகு விதைகள், உப்பு, சில்லி பவுடர் ஆகியவற்றை ஒரு ஜாரில் போட்டு, கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை ஊற்றி மூடி ஒன்றிரண்டு நாட்கள் வெயிலில் வைத்தெடுக்க நொதித்த கஞ்சி ரெடி. இது நல்ல பசியைத் தூண்டும் பானம்.

* நன்னாரி வேர்களை நொதிக்கச் செய்து அதிலிருந்து தயாரிக்கப்படுவது நன்னாரி சர்பத். இது ஜீரணத்துக்கு உதவும் குணம் கொண்டது.

* பனை மரத்திலிருந்து எடுக்கப்பட்டு சேகரிக்கப்படுவது பனங் கள். இந்தக் கள்ளை குறைந்த அளவில் குடிக்கும்போது அது நல்ல ஜீரணத்துக்கு உதவுகிறது.

லஸ்ஸி
லஸ்ஸிhttps://indiaphile.info

* லஸ்ஸி என்பது புரோபயோடிக்ஸ் நிறைந்த ஒரு சுவையான பானம். இது யோகர்டை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுவது. உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, சிறப்பான செரிமானத்துக்கும் உதவுகிறது.

* சொல்காதி (Solkadhi) என்பது ஒரு பிரசித்தி பெற்ற கொங்கன் ட்ரிங்க் ஆகும். இது தேங்காய்ப் பாலுடன் மங்குஸ்தான் பழ சிரப் (Kokum syrup) சேர்த்து தயாரிக்கப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது; சிறப்பான செரிமானத்துக்கும் உதவுவது.

இதையும் படியுங்கள்:
கடினமான மனிதர்களையும் நேசிப்பது எப்படி?
ராகி கூழ்

* தென் இந்தியர்களால் விரும்பிக் குடிக்கப்படுவது ராகி கூழ். கேழ்வரகு மாவை இரவில் கரைத்து நொதிக்கவிட்டு காலையில் கூழாகக் காய்ச்சி மோர் சேர்த்து குடிக்கும் பானம் இது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இதிலிருக்கும் புரோபயோடிக்ஸ் சிறப்பான செரிமானத்துக்கு உதவும். அதோடு, ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வயிற்றுக்கு இதமளிக்கும் ஓர் ஆரோக்கியமான பானம் இது.

* அம்பில் (Ambil) என்பது குஜராத்தில் பிரசித்தி பெற்ற ஒரு பானம். நொதிக்கச் செய்த கேழ்வரகு மாவு கரைசலில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படுவது. வயிற்றுக்கு இதமளிக்கும்; சௌகரியமான செரிமானத்துக்கு உதவும் ஆரோக்கிய பானம் இது.

இது போன்ற நொதித்த உணவுகளை கோடை காலத்தில் அடிக்கடி உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், உடல் உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி பெறச் செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com