பெண்களின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியம் பெற உண்ணவேண்டிய 8 உணவுகள்!

8 Foods to Eat for a Healthy Female Reproductive System
8 Foods to Eat for a Healthy Female Reproductive Systemhttps://tamil.oneindia.com
Published on

னித குலத்தில் ஆண், பெண் என்ற இருபாலருக்கும் இதயம், நுரையீரல், கிட்னி போன்ற அனைத்து உள்ளுறுப்புகளும் ஒரே மாதிரி இருக்கையில், பெண்கள் குழந்தை பெற்று இனவிருத்தி செய்யும் செயல்பாட்டிலும் ஈடுபட வேண்டியதிருப்பதால், அவர்களின் உடலுக்குள் இயற்கையிலேயே கூடுதலாக சில உறுப்புகள் இணைந்து இனப்பெருக்க மண்டலமாக அமைந்துள்ளது. இதில் கருப்பை, சூலகம், பெலோப்பியன் குழாய்கள் ஆகியவற்றை முக்கியமானவையாகக் கூறலாம். இவற்றின் மூலமாகவே மாதவிடாய் சுழற்சி, கருவுறுதல், குழந்தை வளர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இந்த இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்காக பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்கு ஃபொலேட், B வைட்டமின் ஆகிய சத்துக்கள் மிகவும் அவசியம். இவை காலே, பசலைக் கீரை, புரோக்கோலி ஆகிய காய்கறிகளில் அதிகம் நிறைந்துள்ளன.

சால்மன், டிரௌட், சர்டைன் ஆகிய மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இந்த உணவுகளை உண்பதால் மாதவிடாய் சுழற்சியின் காலத்தை ஒழுங்குபடுத்த முடியும்; இனப் பெருக்க மண்டல உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க முடியும்.

ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஸ்பெரி போன்ற பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃபிரிரேடிகல்கள் இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் செல்களுக்கு சிதைவேற்படுத்துவதைத் தடுக்க உதவுகின்றன.

பிரவுன் ரைஸ், ஓட்ஸ், குயினோவா ஆகிய முழு தானியங்களில் நார்ச்சத்து மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளன. இவை இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றன; ஹார்மோன் சுரப்புகளை சமநிலைப்படுத்துகின்றன.

அவகோடா பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் E, நல்ல கொழுப்புகள் ஆகியவை அதிகம் உள்ளன. இதை உண்பதால் ஹார்மோன் சுரப்புகள் சமநிலைப்படும்; இனப் பெருக்க மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

பீன்ஸ், கொண்டைக் கடலை, பருப்பு வகைகள் ஆகியவற்றில், ஃபொலேட், நார்ச்சத்து, தாவர வகைப் புரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளன. இவற்றை உண்பதாலும் இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

க்ரீக் யோகர்டில் புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்ஸ் அதிகம். இவை பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தைக் காக்க உதவி புரிகின்றன; இனப் பெருக்க மண்டல உறுப்புகளில் வளரும் நன்மை தரும் நுண்ணுயிரிகளின் அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் தன் குழந்தைகள் முன் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! 
8 Foods to Eat for a Healthy Female Reproductive System

பாதாம், வால்நட் போன்ற தாவரக் கொட்டைகள் மற்றும் சியா, ஃபிளாக்ஸ் ஆகிய விதைகளிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன. இவை ஒட்டுமொத்த இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

இனப்பெருக்கம் எனப்படும் புனிதமான, பெருமைக்குரிய செயல்பாட்டிற்கு உதவி புரியும் இந்த இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் மேம்பட்ட ஆரோக்கியத்திற்காக பெண்கள் மேற்கூறிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தினசரி உட்கொண்டு நன்மை பெறுவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com