இன்சோம்னியா பாதிப்பு வருவதற்கான 8 முக்கிய காரணங்கள்!

தூக்கமின்மை
Insomnia
Published on

டுத்தர வயதுடையவர்கள் முதல் சீனியர் சிட்டிஸன்ஸ் வரை அனைவருக்கும் பொதுவானதொரு பிரச்னை இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை. இதற்கு பலரும் பலவிதமான காரணங்களைக் கூறினாலும் அவற்றுள் முக்கியமானதாகக் கருதப்படுவது கீழ்காணும் 8 காரணங்களாகும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

வேலை இழப்பு, அன்பிற்குரியவர்களின் இறப்பு, மணமுறிவு போன்ற பெரிய நிகழ்வுகளின் காரணமாக  மனதின் எண்ண ஓட்டத்தில் குழப்பம்  உண்டாகி வரக்கூடிய ஸ்ட்ரெஸ் மூலம் தூக்கமின்மை வரும்.

குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றி தூங்கவும் எழவும் செய்யாமல் தினமும் தன்னிச்சையாக நடந்து கொள்வது உடலின் ஆழ்மன கடிகாரத்தில் (Internal Clock) குழப்பத்தை உண்டுபண்ணி தூக்கமின்மைக்கு வழி வகுக்கும்.

வாழ்வியல் முறையில் கட்டுப்பாடின்றி செயல்படுவதும் தூக்கத்தைக் கெடுக்கும் காரணியாகும்.

தலைவலி, முதுகுவலி, ஆர்த்ரைடிஸ் போன்ற தொடர் உடல் வலியின் காரணமாகவும் ஆரோக்கியமான தூக்கம் பெறுவது சாத்தியமில்லாமல் போவதுண்டு.

ஆன்டி டெப்ரெஸ்ஸன்ட் (Anti depressant), டீ-கஞ்ஜெஸ்டன்ட்ஸ் (Decongestants) மற்றும் இதய ஆரோக்கியம் காக்க உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாகவும் தூக்கமின்மை வரும்.

பார்கின்சன்ஸ், அல்ஸிமெர்ஸ் மற்றும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சின்ட்ரோம் (Restless Legs Syndrome) போன்ற ந்யூரோலாஜிகல் பிரச்னைகளும் தூக்கத்தை கெடுக்கக் கூடியவை.

இதையும் படியுங்கள்:
உயர் ரத்த சர்க்கரை அளவின் 6 அறிகுறிகள்… உங்களுக்கு இருந்தால் ஜாக்கிரதை! 
தூக்கமின்மை

படுக்கைக்குச் செல்லும் முன் காஃபின், நிக்கோட்டின், ஆல்கஹால் போன்றவற்றை உபயோகிப்பதும் தூக்கமின்மைக்கான காரணிகளாகும்.

பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு (Post-traumatic stress disorder), மனக் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவையும் தூக்கத்தைக் கெடுக்கும் முக்கிய காரணிகளே.

சீரான மனவளம் மற்றும் சரியான வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்து இரவில் நல்ல தூக்கம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com