சாரப் பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. சாரப் பருப்பில் நீரிழிவு எதிர்ப்பு குணம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இதில் மெத்தனாலிக் பண்புகள் உள்ளதால் இது நமது உடலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணாமாக இருக்கும் காரணிகளை எதிர்க்கிறது. இந்த பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதோடு மட்டுமல்லாமல், கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது.
சாரப் பருப்பு இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஆயுர்வேத மருந்துகளில், சாரப் பருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.
இவை இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகள் மற்றும் மன அழுத்த ஹார்மோனை அகற்ற உதவுகிறது. சாரப் பருப்பில் உள்ள பண்புகள் முடி வேர்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சாரப் பருப்பு சாப்பிடுவதுடன், அதன் எண்ணெயையும் தடவுவதால், முடி உதிர்வு தடுக்கப்படுவதோடு, முடி வளர்ச்சியம் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஐந்தாறு சாரப் பருப்புகளை சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். இந்தப் பருப்பில் முந்திரி, பாதாம் இரண்டையும் விட குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எந்த வயதினருக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியதும் ஆகும்.
சாரப் பருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதில் இந்தப் பருப்பு பெரும் பங்காற்றுவதோடு, வயிற்றுப்போக்கையும் குணப்படுத்தி, வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.