கோடைக்கால நோய்களிலேயே மிகவும் கொடுமையானது அம்மை நோய்தான். தற்போது அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. நம்மை அன்றாட வாழ்க்கையில் இருந்து முடக்கிப்போடும் ஒரு நோய் இது. பெற்றார், உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், ஏன் நம் வீட்டில் இருப்பவர்கள் கூட நம்மிடம் வர பயப்படுவார்கள். அந்த அளவுக்குக் கடுமையான வியாதிதான் இது. அம்மை நோய் எப்படிப் பரவுகிறது என்று பார்த்தால் நிச்சயம் இது ஒரு தொற்று நோய்தான். அம்மை நோய் கண்டவுடன் உடனடியாக நாம் செய்ய வேண்டிய கைக்கண்ட இயற்கை மருத்துவங்கள் ஏராளம் உள்ளன. அம்மை நோய் வராமல் தடுக்கவும், அது வந்த பின் போக்கவும் இயற்கை நமக்கு அளித்த 8 மருத்துவ ஆலோசனைகளை கீழ்க்கண்ட பதிவில் பார்ப்போம்.
1. எலுமிச்சை சாறு: நீங்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால், எலுமிச்சைச் சாறை அதிகமாக உட்கொள்ளலாம். 15 முதல் 25 மில்லி எலுமிச்சை சாறை தண்ணீரில் பிழிந்து உட்கொள்வது, ஒரு சரியான இயற்கை நிவாரணமாகும்.
2. பூண்டு: பூண்டு பற்களை பொடி செய்து அதில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் விரைவில் குணமாகும்.
3. அதிமதுரம்: அரை டீஸ்பூன் அதிமதுர வேரை பொடியாக நறுக்கி சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டால் அம்மை நோயிலிருந்து திறம்பட குணம் பெறலாம். நீங்கள் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் தினமும் இதை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
4. பாகற்காய் இலைகள் மற்றும் மஞ்சள் வேர்: இது சுவையாக இருக்காது. ஆனால், நீங்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் இது ஒரு இயற்கை நிவாரணமாக விளங்குகிறது. பாகற்காய் இலைகளை சாறு செய்து, மஞ்சள் வேர் மற்றும் தேன் கலவையுடன் சேர்த்து சாப்பிடுவது, அம்மை நோய்க்கு சிறந்த நிவாரணமாகும்.
5. பார்லி: நீங்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பாதாம் எண்ணெயுடன் சுவையூட்டப்பட்ட பார்லி தண்ணீரை அடிக்கடி குடிப்பது நல்ல நிவாரணம் அளிப்பதாகும்.
6. நெல்லிக்காய்: அம்மையின்போது ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றைப் போக்க நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிடுவது சிறந்த வழியாகும்.
7. தேங்காய் நீர் மற்றும் சதை: இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை சர்க்கரையின் களஞ்சியமாகும். இது உடலில் உள்ள நச்சுக் கூறுகளை சுத்தப்படுத்துவதாக செயல்படுகிறது, தேங்காய் நீர் அம்மையை சமாளிக்க ஒரு சிறந்த பானமாக விளங்குகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேங்காய் சதை உங்கள் மீட்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
8. புளி விதைகள் மற்றும் மஞ்சள்: சம அளவு பொடி செய்த புளி விதைகள் மற்றும் மஞ்சள் கலவையானது அம்மை நோயை குணப்படுத்தும். இந்தக் கலவையை 350 கிராம் முதல் 425 கிராம் வரை, நோயாளிக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்கலாம்.
இனி, அம்மை நோயைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் இவற்றைக் கொண்டு அம்மை நோயிலிருந்து நிவாரணம் பெறலாமே!