பேரீச்சம் பழத்தின் அரசன் - அரசி எது தெரியுமா? 8 வகைகள் தெரியுமா? தெரிஞ்சுக்கலாமே...

Dates
Dates
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேரீச்சம் பழத்தில் எத்தனை நன்மைகள் உள்ளனவோ, அதேபோல் அத்தனை வகைகளும் உள்ளன. அவற்றைப் பார்ப்போமா?

1. Medjool dates

பேரீச்சம் பழத்தின் அரசன் என்று அழைக்கப்படும் இவை, ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தவை. இவற்றில் இயற்கையான சர்க்கரை 100 கிராமுக்கு 70 கிராம் அளவு உள்ளன. இதனால் அதிக அளவு உட்கொள்வது நல்லதல்ல

2. Deglet Noor dates

பேரீச்சம்பழங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. அதிக நார்ச்சத்தும், குறைந்த க்ளைசீமிக் குறியீடும் கொண்டது. குறைந்த அளவு சர்க்கரை உள்ளதால் நீரிழிவுக்கு நல்லது.

3. Barhi dates

மென்மையாகவும் வெண்ணெய்ச் சுவையோடும் மற்றும் ப்ரீ பயாடிக் நிறைந்த இது குடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. இது நீரேற்றமாக வைப்பதால் சருமம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில்சர்க்கரை அதிகம் உள்ளதால் நீரிழிவுக்கு நல்லதல்ல.

4. Zahidi dates

பொன்னிறத்தில் காணப்படும் இவ்வகை வறட்சியாக இருக்கும். கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. குறைந்த க்ளைசீமிக் குறியீடு உள்ளதால் எடைக் குறைப்புக்கு ஏற்றது நீரிழிவுக்கும் சிறந்ததாகும்.

Dates
Dates

5. Thoory dates

இதை ப்ரெட் டேட்ஸ் என்றும் கூறுவார்கள். குறைந்த க்ளைசீமிக் குறியீடு கொண்ட இது நீரிழிவிற்கு நல்லது.

6. Ajwa dates

இது Prophets dates என்று கூறப்படுகிறது. பொட்டாசியம் மக்னீசியம் நிறைந்த இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கக் கூடியது. மேலும் இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூட்டுக்களுக்கும் குடலுக்கும் சிறந்தது. இதை குறைந்த அளவில் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம்.

7. Halwai dates

மென்மையாகவும் சுவைப்பதற்கு கார்மல் டேஸ்ட் உள்ள இது பொட்டாசியம் மக்னீசியம் நிறைந்தது. மூளை மற்றும் ஞாபகத்திற்குக்குச் சிறந்தது. இதில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் நீரிழிவுக்கு நல்லதல்ல.

8. Khudri dates

அடர்த்தியான ப்ரௌன் நிறத்தில் உள்ள இது அதிக இரும்புச் சத்து நிறைந்தது. சோர்வு மற்றும் அனீமியாவை போக்கவல்லது. அதிக நார் சத்து நிறைந்தது. 100 கிராம் எடையில் 60 கிராம் இயற்கை சர்க்கரை நிறைந்தது.

இதையும் படியுங்கள்:
கண் பயிற்சிகள் செய்து கண்ணாடி போடுவதை தவிர்க்க முடியுமா?
Dates

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com