கண் பயிற்சிகள் செய்து கண்ணாடி போடுவதை தவிர்க்க முடியுமா?
தற்போது உள்ள காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி போடும் நிலை உள்ளது. கண்களுக்கு ஏதேனும் பயிற்சி அளிப்பதின் மூலமாக இதை குணப்படுத்த முடியுமா? என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்ணாடிப் போடுவதற்கான காரணம் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை ஏற்படுவதேயாகும். Myopia என்று சொல்லப்படும் கிட்டப்பார்வை வருவதற்கான காரணம், கண்களில் உள்ள Eyeball நீளமாகிவிடும். அப்போது தூரத்தில் இருந்துவரும் ஒளி ரெட்டினா என்னும் லென்ஸ் பகுதியில் ஃபோகஸ் ஆகாமலே அதற்கு முன்பே ஃபோகஸ் ஆகிவிடும். அதனால் தூரத்தில் இருக்கும் பொருட்களை சரியாக பார்க்க முடியாமல் போகும். இது 30 முதல் 40 சதவீத குழந்தைகளுக்கு இந்த பிரச்னை வருகிறது.
வயதானவர்களுக்கு கிட்ட இருக்கும் பொருட்களை சரியாக பார்க்க முடியாமல் போகலாம். இதை Presbyopia என்று சொல்வார்கள். இதற்கு Reading glasses போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.
கண்களுக்கான பயிற்சியான யோகா போன்றவற்றை செய்வதனால் கண் பார்வை சம்மந்தமான பிரச்னைகளை சரிசெய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கண்கள் ஒரு பொருளை ஃபோக்கஸ் செய்ய முயற்சிக்கும் போது தசைகளில் ஏற்படும் Eye strain தலைவலியை உண்டாக்குகிறது.
கண் பார்வை சம்மந்தமான பிரச்னைகள் மூலமாக ஏற்படும் தலைவலியை போக்குவதற்கு இதுப்போன்ற கண் பயிற்சிகள் உதவும் என்று சொல்லப்படுகிறது. சீனாவில் கண் பயிற்சியை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் Myopia மற்றும் Presbyopia போன்றவற்றின் பவரை குறைக்க முடியும் என்று எந்தவிதமான ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. ஆனால், கண்களில் ஏற்படும் ஸ்ட்ரெயினை சரிசெய்ய உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு கண்ணாடி போட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கண்களில் ஸ்ட்ரெயின் இருக்கும். அவர்களுக்கு இந்தப் பயிற்சி வெகுவாக உதவும். ஆனால் அதிகமாக கண்களில் பவர் இருப்பவர்கள் கட்டாயம் கண் கண்ணாடி போட்டு ஆக வேண்டும். எனவே, இதுப்போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கண் பயிற்சி செய்வது மட்டுமே தீர்வாக அமையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.