கறிவேப்பிலை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு மூலிகையாகும். அந்த வகையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் அருந்தும்போது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. செரிமானத்தை மேம்படுத்தும்: கறிவேப்பிலை நீரை காலையில் குடிப்பதால் வயிற்றுக்குள் சத்து சீராக பரவுவதால், செரிமான பிரச்னைகள் சுலபமாகக் குணமாகி, மலச்சிக்கலை குறைத்து வயிற்றுப் புண்ணை தீர்க்கிறது.
2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்: கறிவேப்பிலை கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்கி, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பதால் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீரை தினமும் குடிப்பது சிறந்தது.
3. சருமத்தை சுத்தமாக்கும்: கறிவேப்பிலை நீரில் உள்ள நிறைந்த ஆன்டி ஆக்சிடெண்ட் (anti-oxidant) தன்மை, சருமத்தில் உள்ள பருக்கள், மருக்குகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவி முகத்தில் இளமையைக் கொண்டுவந்து, பொலிவான தோற்றத்தை வழங்குகிறது.
4. எடை குறைக்க உதவும்: கறிவேப்பிலை நீரில் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்கும் தன்மை உள்ளதால் இதைக் குடிக்கும்போது உடல் கொழுப்பு எளிதில் கரைந்து, நீண்ட காலம் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு உதவிடும்: கறிவேப்பிலை நீர் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால் இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக நிர்ணயிக்க உதவுகிறது.
6. முடி வளர்ச்சியை மேம்படுத்தும்: கறிவேப்பிலையின் இரும்பு சத்து, முடி வேர்களை வலுப்படுத்தும் திறன் கொண்டதால், முடி உதிர்வைத் தடுத்து புதிதாக வலுவான முடி வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வு குறைந்து, பளபளப்பான, நீளமான, கருமையான முடியை பெற உதவும்.
7. வயிற்றுப் புண்களை குணப்படுத்தும்: கறிவேப்பிலை நீரின் ஆற்றல், வயிற்றுப் புண்கள் மற்றும் பலவிதமான வயிற்றுப் பிரச்னைகளை நிவர்த்தி செய்து நல்ல செரிமான ஆரோக்கியத்தை வழங்கும்.
8. நரையைக் கட்டுப்படுத்தும்: கறிவேப்பிலை நீரில் உள்ள சத்துக்கள், முடியின் நரை அதிகரிப்பை தடுக்கவும், இயற்கையான முடி நிறத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன.
9. பாக்டீரியாவை எதிர்க்கும்: கறிவேப்பிலையின் நச்சு நீக்க சக்தி, உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி, சரும நோய்களைக்குணமாக்கி சருமத்தை சுத்தமாக்குகிறது.
கறிவேப்பிலை நீரை எப்படித் தயாரிப்பது?: கொஞ்சம் கறிவேப்பிலை இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து, பாதியாக ஆவியாகும் வரை விட்டு வைக்கவும். பிறகு அதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.