யூரிக் ஆசிட் அளவைக் குறைக்க உதவும் 9 வகை மூலிகைகள்!

யூரிக் ஆசிட்  பாதிப்பு
யூரிக் ஆசிட் பாதிப்புhttps://www.onlymyhealth.com
Published on

மது உடலில்  யூரிக் ஆசிட் என்ற அமிலத்தின் அளவு தேவையை விட அதிகமாகும்போது அவை  மூட்டுக்களில் கிரிஸ்டல்களாக (Gout) மாறி, வலியை உண்டாக்கும். அதுவே ஆர்த்ரைடிஸ் என்னும் நோயாக மாறுகிறது. யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும் சில வகை மூலிகைகள் என்னென்ன என்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.

1. மஞ்சள்: இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமுடைய மூலிகை. இதிலுள்ள குர்க்குமின் என்ற கூட்டுப்பொருளானது யூரிக் ஆசிட் உற்பத்தி அளவையும் வீக்கங்களையும் குறைக்க உதவும். மஞ்சளை உணவுகளில் சேர்த்தும் டீ போட்டும் சாப்பிடலாம்.

2. இஞ்சி: ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமுடைய மற்றொரு மூலிகை இஞ்சி. இதிலுள்ள ஜிஞ்ஜரால் என்ற பொருள் வீக்கங்களை குறைக்கவும் யூரிக் ஆசிட் அளவை குறைக்கவும் உதவும். உணவுகளில் சேர்த்தும் டீ போட்டும் இதை அருந்தலாம்.

3. டான்டெலியன் (Dandelion): இதை ஒரு களைச் செடியாக மட்டும் கருத முடியாது. இது ஒரு டையூரிக் குணம் நிறைந்த மூலிகை. இந்த குணம் தேவைக்கு அதிகமான யூரிக் ஆசிடை வெளியேற்ற கிட்னிக்கு உதவும். இந்த மூலிகையில் டீ போட்டு அருந்தலாம்.

4. டெவில்'ஸ் க்ளாவ் ( Devil's Claw): தெற்கு ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட மூலிகை. வீக்கங்களையும் வலியையும் குறைக்க உதவும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இது யூரிக் ஆசிட் அளவை குறைக்கும்; மூட்டுக்களில் கிரிஸ்டல் உருவாகும் அறிகுறியைத் தடுக்கும். தைலமாகவும் கேப்ஸ்யூலாகவும் இது கிடைக்கும். இதை வாங்கி தினமும் உபயோகிக்கலாம்.

5. செலரி விதை: இது ஒரு சக்தி வாய்ந்த நச்சு நீக்கி. உடலிலுள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டை உடம்பிலிருந்து நீக்க உதவும். இதிலுள்ள லூடியோலின் (Luteolin) என்ற பொருள், யூரிக் ஆசிட் உற்பத்தியின் அளவை அதிகரிக்க உதவும். எக்ஸாந்தைன் (Xanthine) என்ற என்ஸைமின் செயல்பாடுகளைத் தடுக்க உதவும். இந்த விதைகளை சமையலில் உபயோகித்து உண்ணலாம்.

6. நெட்டில் (Nettle): கௌட் உள்பட பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாக நூற்றாண்டு காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வருவது இந்த மூலிகை. இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் யூரிக் ஆசிட் அளவையும் வலிகளையும் குறைக்க உதவும். இந்த மூலிகையில் டீ போட்டு குடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிப்பது பாதுகாப்பானது தெரியுமா? 
யூரிக் ஆசிட்  பாதிப்பு

7. மில்க் திஸ்ஸில்: இதிலுள்ள ஸிலிமரின் என்ற ஆக்ட்டிவ் கூட்டுப்பொருளானது கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட உதவும். அதிகப்படியான யூரிக் ஆசிட், நச்சுக்களாக கல்லீரல் வழியே வெளியேற மில்க் திஸ்ஸில் மறைமுகமாக உதவி புரிகிறது. இதை மாத்திரையாகவும் கேப்ஸ்யூலாகவும் எடுத்துக் கொள்ளலாம். டீ போட்டும் குடிக்கலாம்.

8. செம்பருத்திப் பூ: இதன் டையூரிக் குணம் யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும். இதில் டீ போட்டு தினமும் அருந்தலாம்.

9. க்ரீன் டீ: இதிலுள்ள கேட்டச்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் வீக்கங்களைக் குறைக்கவும் கிட்னி சிறப்பாக செயல்படவும் உதவும். யூரிக் ஆசிட் அளவைக் குறைப்பது உள்பட பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்குத் தரக்கூடியது இந்த டீ.

மேற்கூறிய மூலிகைகளை உபயோகித்து நாமும் யூரிக் ஆசிட் அளவை கட்டுக்குள் வைத்துப் பராமரிக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com