ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிப்பது பாதுகாப்பானது தெரியுமா? 

coffee
How much coffee is safe to drink per day?
Published on

காபி உலகங்களும் பலரால் விரும்பப்படும் ஒரு பிரபலமான பானம். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி நாம் விழிப்புணர்வாக இருக்கவும் உதவுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிப்பது பாதுகாப்பானது? என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. இந்தப் பதிவில் அதை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். மேலும், காபியின் நன்மை தீமைகளையும் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

காபியின் நன்மைகள்: 

காபியில் உள்ள ‘காஃபின்’, மூளைக்கு சென்று அடினோஸின் என்ற ரசாயனத்தின் செயல்பாட்டை தடுக்கிறது. இந்த ரசாயனம் சோர்வு மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தும் ரசாயனமாகும். காஃபின் அதன் செயல்பாட்டை தடுப்பதால் நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். 

சில ஆய்வுகள் காபி குடிப்பதால் இதய நோய், பக்கவாதம் சில வகையான புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறுகின்றன.‌ மேலும், காபி மன அழுத்தத்தைக் குறைத்து மன நிம்மதியை மேம்படுத்த உதவும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. 

வயதான காலத்தில் அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க காபி குடிப்பது பலனளிக்கும் என சொல்லப்படுகிறது. 

காபியின் தீமைகள்: 

அதிக அளவு காஃபின் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலருக்கு அதிகமாக காபி குடிப்பதால் செரிமானப் பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை அமில சுரப்பு அதிகரிக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம். 

அதிக அளவு காபி உடலில் நடுக்கம் வேகமான இதயத் துடிப்பு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தி, சில உடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவு காபி குடிப்பது தீங்கு விளைவிக்கக்கூடும். 

இதையும் படியுங்கள்:
லெக்டின் சத்து  நிறைந்த உணவு மற்றும் பழங்களை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும் தெரியுமா?
coffee

பாதுகாப்பான அளவு என்ன?  

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), ஒரு நாளைக்கு 400 மி.கி காஃபின் (சுமார் 4 கப் காபி) வரை ஒரு நபர் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்று கூறுகிறது. இருப்பினும் இதைவிட குறைந்த அளவு நாம் எடுத்துக் கொள்வதே நமக்கு பாதுகாப்பானது. 

நீங்கள் தினசரி அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். காபி குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருந்தாலும், அதன் பக்க விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நாலு கப் காபிக்கு மேல் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். இது உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமானது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com