உடலுக்கு நன்மை பயக்கும் 9 வித கார்போஹைட்ரேட் உணவுகள்!

9 types of carbohydrate foods that are beneficial for the body!
9 types of carbohydrate foods that are beneficial for the body!https://www.healthkart.com
Published on

ர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிற விழிப்புணர்வு மக்களிடையே இப்போது பரவ ஆரம்பித்திருக்கிறது. கார்போஹைட்ரேட்டுகள் என்பது கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஆனது. கார்போஹைட்ரேட் உணவுகள்தான் உடலுக்கு ஆற்றலையும் சக்தியையும் அளிக்கிறது. நமது மூளை கார்போஹைட்ரேடுகளை மனம் மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு எரிபொருளாக பயன்படுத்துகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, வெள்ளை மாவுடன் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட எதையும் மிதமாக உட்கொள்ள வேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்பு உருளைக்கிழங்கு, பழுப்பு அரிசி, வாழைப்பழங்கள், பருப்பு வகைகள், ஓட்ஸ், பால், திராட்சை மற்றும் கேக்குகள் போன்ற சத்தான சிற்றுண்டிகள் சில நன்மை பயக்கும் உயர் கார்ப் உணவுகள்.

1. சர்க்கரை வள்ளிக் கிழங்கு: சர்க்கரை நோயாளிகள் கூட உண்ண ஏற்றது. இதை வறுத்து, பொறித்து உண்ணாமல் ஆவியில் வேகவைத்து உண்டால் அதன் சத்துக்கள் அனைத்தையும் அப்படியே பெறலாம். சூப்பிலும் சாலடுகளிலும் பயன்படுத்தலாம்.

2. பீட்ரூட்: இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மேலும், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இதை சமைத்து உண்ணும்போது இதில் உள்ள ஏராளமான கனிம நைட்ரேட்டுகள் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த சக்தியை அளிக்கிறது.

3. சோளம்: சோளத்தில் நிறைய கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. இது இரத்த ஓட்டத்தில் மெதுவாக கலப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. உடலுக்கு ஆற்றலையும் சக்தியையும் அளிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.

4. ஓட்ஸ்: இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் உணவு. இதில் உள்ள நார்ச்சத்து கரையக்கூடியது. எனவே, ஓட்ஸ் சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசிக்காது. எடை குறைப்பிற்கு பயன்படுகிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவை குறைப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது.

5. குயினோவா: குயினோவா என்பது சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகிய தானியங்களைப் போன்றது. இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவையும் நிறைந்திருக்கின்றன. பார்லி, கம்பு, அரிசி மற்றும் சோளம் போன்ற தானியங்களை விட வைட்டமின் பி அதிகம் இதில் இருக்கிறது. உடல் தசைகள், சருமம் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. இவற்றில் இயற்கையாகவே க்ளூட்டன் (பசையம்) இல்லாததால் கோதுமைக்கு சிறந்த மாற்றாக இருக்கிறது.

6. கொண்டைக்கடலை: ஒரு கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்தும் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, இ, சி ஆகியவை உள்ளன. சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு மிகச்சிறந்த உணவு கொண்டைக்கடலை. இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது. மலச்சிக்கலை தடுத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்களுக்கு சிறந்த உணவு கொண்டைக்கடலை.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை காய்கறிகள் சாப்பிட மறுக்கிறதா? இப்படி சாப்பிட வைத்துப் பாருங்களேன்!
9 types of carbohydrate foods that are beneficial for the body!

7. ஆப்பிள்: இது பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ மற்றும் ஏராளமான ஆக்சிஜனேற்றிகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி கொழுப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. புற்றுநோய் செல்களில் இருந்து காக்கிறது.

8. ப்ளூ பெர்ரி: இதில் நீர்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீஸ் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்து இருக்கின்றன, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.

9. ஆரஞ்சு: இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை புதுப்பிக்கின்றன. உடலில் இரும்பு சத்து சேர்வதற்கு உதவுகிறது. வயதாவதை தடுத்து இளமை தோற்றத்தை அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com