இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!

இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!
Published on

ம் உடலில் ஓடும் இரத்தமானது நூறு சதவிகிதம் சுத்தமானது எனக் கூற முடியாது. நம் வாழ்க்கை முறை, உட்கொள்ளும் ஜங்க் ஃபுட், ஆல்கஹால் ஆகியவற்றின் காரணமாக இரத்தத்தில் அசுத்தங்கள் கலந்திட வாய்ப்பு உண்டு. இரத்தம் அசுத்தமடைந்தால் சருமத்தில் தடிப்பு, பருக்கள், ஒவ்வாமை போன்ற கோளாறுகள் உண்டாகும். இரத்தத்தை சுத்திகரிக்க நாம் உட்கொள்ளவேண்டிய 9 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பீட்ரூட்: பீட்ரூட்டை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் எனலாம். இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் நச்சுக்களை வெளியேற்றும் செயலில் கல்லீரலுக்கு உதவவும் செய்யும். இதிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டாலைன் என்ற பொருளும் கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படவும் இரத்தத்திலுள்ள அசுத்தங்களை அகற்றவும் உதவி புரியும்.

2. பூண்டு: பூண்டில், சல்ஃபரை உள்ளடக்கிய அல்லிசின் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் கொண்டது. இந்த குணங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

3. லெமன்: லெமனில் அசிடிக் சுவை உள்ளபோதும், உடலில் ஆல்கலைன் உண்டுபண்ண உதவக்கூடியது லெமன். இது இயற்கை முறையில் இரத்த சுத்திகரிப்பானாக செயல்படக் கூடியது. லெமனில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஒருவகை என்சைம்களின் உற்பத்தியை பெருகச்செய்வதில் பெரும் பங்காற்றுபவை.

4. மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சக்தி வாய்ந்த கூட்டுப் பொருளானது ஃபிரீரேடிகல்களை எதிர்த்துப் போராடி, இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்குவதற்கு கல்லீரலுக்கு பெருமளவில் உதவும்.

5. வெல்லம்: இந்த சுத்திகரிக்கப்படாத சர்க்கரையில் இரும்புச் சத்து அதிகம். அது இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை உயரச் செய்து இரத்த ஓட்டம் சிறப்புற நடைபெற உதவும். மேலும், இரத்த நாளங்களில் படிந்திருக்கும் உறைந்த இரத்தக் கட்டிகளை வெளியேற்றி இரத்தம் சுத்தமடைய உதவும்.

6. பச்சை இலைக் காய்கறிகள்: பசலை, காலே போன்ற கீரைகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் அதிகம் உள்ளன. இவை சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சுத்தமான இரத்தம் உடலுக்குள் பரவ உத்திரவாதம் அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆளுமையை வளர்த்துக்கொள்ள கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்க உதவும் 9 வகை உணவுகள்!

7. மாதுளை: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாதுளையில் அதிகம். மேலும், மாதுளை ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இவை இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெற உதவி புரியும். இதய இரத்த நாளங்களில் கோளாறு உண்டாகும் அபாயத்தைத் தடுக்கவும் செய்யும்.

8. கொத்தமல்லித் தழை: மெர்க்குரி மற்றும் அதுபோன்ற வேறு சில ஹெவி மெட்டல்களின் துகள்கள் உணவுடன் கலந்து அல்லது அசுத்தக் காற்றின் வழியாகவோ உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மல்லித் தழை போன்ற பச்சை இலைகளில் இருக்கும் குளோரஃபில் போன்ற உலோகத் துகள்களை இரத்தத்திலிருந்து பிரித்து வெளியேற்ற உதவும்.

9. இஞ்சி: இஞ்சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் கொண்ட மூலிகை. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், செரிமானம் சிறப்பாக நடைபெறவும், கல்லீரல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். இதனால் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் ஓர் உன்னதமான உணவாக இஞ்சி கருதப்படுகிறது.

மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு இரத்த நாளங்களில் கோளாறு ஏதுமின்றி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com