மன அழுத்தம் போக்கும் 9 வகை உணவுகள்!

Stress-relieving foods!
Stress-relieving foods!
Updated on

வேலைப்பளு, மனக்கவலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் நம் மனம் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும்போது நம்மால் சாதாரண முறையில் உணவை உட்கொள்ள முடியாது. அதனால் உடல் சக்தியிழந்து சோர்வுற்ற நிலைக்குத் தள்ளப்படும். இதைத் தவிர்க்க நம் உடலுக்கு உடனடி சக்தி அளிக்கக்கூடிய 9 வகை உணவுகளை போகிற வழியிலேயே உட்கொள்வது நலம் தரும். அந்த 9 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நட்ஸ்: பாதாம் மற்றும் வால்நட் போன்ற தாவர வகைக் கொட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்தக் கொட்டைகளை சுலபமாக கையோடு எடுத்துச் செல்ல இயலும் என்பதால் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றும் உண்ணலாம்.

2. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை ஒருவரின் மன நிலையை மகிழ்ச்சியாய் வைக்க மிகவும் உதவி புரியும். மனநிலை சரியாக இல்லாத நேரத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடனடியாக மகிழ்ச்சி ரேகைகளை முகத்தில் படர விடும்.

3. க்ரீக் யோகர்ட்: மன அழுத்தமானது நமது இரைப்பை குடல் இயக்கங்களில் அதிக பாதிப்பை உண்டாக்கக் கூடியது. ஆகையால், ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும் நேரங்களில் செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க க்ரீக் யோகர்ட் உண்பது  நன்மை தரும். இதிலுள்ள புரோட்டீன் மற்றும் புரோபயோட்டிக்குகள் ஜீரண மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும்.

4. பழங்கள்: வாழைப்பழம், ஆப்பிள் அல்லது பெரி வகைப் பழங்கள் இயற்கையான சர்க்கரை மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்தவை. இவை உடலுக்குள் ஸ்ட்ரெஸ்ஸினால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை எதிர்த்துப் போராட உதவும்.

5. பாப்கார்ன்: இது ஒரு முழு தானிய உணவாகும். ஏர் பாப்ட் (Air popped) கார்ன் குறைந்த கலோரி கொண்டது. இதை உண்பதால் மனநிலை தெளிவு பெற்று மகிழ்ச்சி உண்டாகும். அதிலுள்ள ஊட்டச் சத்துக்களும் உடலுக்கு குற்ற உணர்வு இல்லாத புத்துணர்ச்சி பெற உதவும்.

6. ஹம்முஸ் மற்றும் காய்கறிகள்: காரட், வெள்ளரி, பெல் பெப்பர் போன்றவற்றை ஹம்முஸ் (Hummus) சேர்த்து ஸ்நாக்ஸ்ஸாக உண்ணும்போது உடலுக்கு அதிகளவு நார்ச்சத்தும் வைட்டமின்களும் கிடைக்கும்.

7. சீஸ்: பொதுவாக, சீஸ் வகைகள் அனைத்திலும் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் என்றாலும், அனைத்துமே ஆரோக்கியமற்றது எனக் கூற முடியாது. சில வகை சீஸ்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளும்போது அவை ஸ்ட்ரெஸ் குறையவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
மழை மற்றும் குளிர் காலங்களில் அவசியம் தவிர்க்க வேண்டிய 4 விஷயங்கள்!
Stress-relieving foods!

8. ஓட் மீல்: ஒரு கப் வெதுவெதுப்பான ஓட் மீல் மனதுக்கு இதமளிக்கவும் வயிற்றை நிரப்பவும் உதவும்.

9. முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் D நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் வருத்தமும் அழுத்தமும் வரக்கூடிய அறிகுறிகளைக் குறைத்து ஆரோக்கியமான மனநிலை பெறவும் உதவும்.

எப்போதாவது மனசு சரியில்லாத மாதிரி தோன்றும்போது மேற்கூறிய உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரம்பத்திலேயே சரி உற்சாகப்படுத்திக் கொள்ளலாமே!

logo
Kalki Online
kalkionline.com