கிரான்பெர்ரி பழம்
கிரான்பெர்ரி பழம்https://www.healthline.com

சிறுநீரகத் தொற்று நோய்களுக்கு அருமருந்தாகும் அபூர்வ பழம்!

Published on

கிரான்பெர்ரி (Cranberry) குருதி நெல்லி என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பழம் ஆகும். இது அமெரிக்காவை பூர்வமாகக் கொண்டது. கிரான்பெர்ரியில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் உள்ளன. கிரான்பெர்ரிகள் புளிப்பு சுவை உடையவை. இதில் அதிகமான ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன.

முழு உடலுக்கும் ஆரோக்கியம் தரும் பழம் கிரேன்பெர்ரி பழங்கள் என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பழங்கள் நமது குடலுக்கு தீங்கிழைக்கும் மைக்ரோ பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்கிறது. மெட்டோபாலிசத்தை அதிகரித்து இருதயத்தின் நலன் காக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலலை அதிகரித்து ஒட்டுமொத்த உடல் நலனுக்குப் பயன் தருகிறது என்கிறார்கள் இந்தப் பழங்கள் சிறுநீர்ப்பாதை நோய் பாதிப்பு அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது, அதுவும் தொடர்ச்சியாக உடல் உஷ்ண, பிரச்னைகள் இருந்தால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) வர தொடங்கிவிடும். இதனால் தாங்க முடியாத வலி ஏற்படும். இது பல்வேறு சிறுநீர்ப்பை நோய்களுக்கும் வழிவகுக்கும். வயதானவர்கள், குழந்தைகள், பெண்களில் மூவரில் ஒருவர் சிறுநீர்ப் பாதை தொற்றை (UTI) அனுபவிக்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முறையாக சிகிச்சை செய்யாவிட்டால், சிறுநீரகங்களில் மேலும் சிக்கல்களை உண்டாக்கும். இந்த நோய்களை 50 சதவீதம் குறைக்கும் ஆற்றல் கிரான்பெர்ரி  பழங்களுக்கு உள்ளது என ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கிரான்பெர்ரியில் உள்ள சத்துக்கள் எலும்புகள், பற்கள் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இந்தப் பழங்களை உட்கொண்டால் கடுமையான கொழுப்புகளையும் கரைக்க முடியும். பாலிபினோலிக் கலவைகள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எச்.டி.எல். அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இது உங்கள் உடலை மாரடைப்பு, நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகங்களை வீக்கத்திலிருந்து பாதுகாப்பதில் கிரான்பெர்ரிகள் மிகச் சிறந்தவை. அவற்றில் உள்ள அந்தோசயனிடின்கள் இந்த வேலையைச் செய்கின்றன.

எனவே, இதனை தினமும் ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம். குருதி நெல்லி பழத்தை உட்கொண்டு வரும்பொழுது நீரிழிவு, வயிற்றுப் போக்கு, கீல்வாதம், பல் ஈறு நோய், பெப்ட்டிக் புண் நோய், பல் சிதைவு மற்றும் துவாரங்கள், ஈஸ்ட் தொற்றுகள் போன்றவை குணமடையும். உணவில் கிரான்பெர்ரி சேர்க்கப்படுவது 17 வெவ்வேறு புற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
பீஜ் ஃபிளாக் ஆசாமிகளின் குணாதிசயங்கள் தெரியுமா?
கிரான்பெர்ரி பழம்

சில வகையான நோயெதிர்ப்பு அமைப்பு செல்களின் செயல்பாடு மற்றும் எண்ணிக்கையை பெர்ரி அதிகரிக்கிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையடைகிறது. ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் குருதிநெல்லி சாறு அருந்துவதால் வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று அமெரிக்க விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

கிரான்பெர்ரி ஜூஸில் ஆன்டி செப்டிக் பண்புகள் காணப்படுகின்றன. இது உச்சந்தலை அரிப்பு மற்றும் பொடுகை போக்க உதவுகிறது. கிரான்பெர்ரி ஜூஸ் சேதமடைந்த கூந்தல், அலோபீசியா மற்றும் தலை வழுக்கைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிரான்பெர்ரி வைட்டமின் ஈ  சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ மற்றும் சி இரண்டுமே சூரிய ஒளிப்பாதிப்பில் இருந்து சருமத்தை, கூந்தலை பாதுகாக்க உதவுகிறது.

சிறுநீரகக் கற்கள் இருந்தால் குருதிநெல்லி சாறை அதிகமாகக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். இன்னும் அதிக பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். கிரான்பெர்ரிகளில் கணிசமான அளவு சாலிசிலிக் அமிலம் உள்ளது. சாலிசிலிக் அமிலம் ஆஸ்பிரின் போன்றது. உங்களுக்கு ஆஸ்பிரின் ஒவ்வாமை இருந்தால், அதிக அளவு குருதிநெல்லி சாறு குடிப்பதைத் தவிர்க்கவும்.

logo
Kalki Online
kalkionline.com