வாய்ப்புண்ணை விரட்டியடிக்கும் எளிமையான வீட்டு மருத்துவம்!

A simple home remedy to mouth sore!
A simple home remedy to mouth sore!https://www.hindutamil.in

ம் வாயை எவ்வளவுதான் பராமரித்துப் பார்த்துக் கொண்டாலும் சில சமயங்களில் வாய்ப்புண் வந்துவிடும். அப்படி வாயில் புண் வந்துவிட்டால் அது குணமாகும் வரை மிகவும் அவஸ்தை பட வேண்டியிருக்கும். சாப்பிட முடியாமல், சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ எதுவும் அருந்தவும் முடியாமல் வலியால் தவிக்க வேண்டியிருக்கும். வாய்ப்புண் ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

வைட்டமின் மற்றும் மினரல் உடலில் குறைந்தால் ஏற்படும், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும், அசிடிக் உணவுகளான எலுமிச்சை, அன்னாசி, ஸ்ட்ராபெரி போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது சென்சிட்டிவானவர்களுக்கு வாய்ப்புண் வரும். வாய்ப்புண் வந்துவிட்டால், நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து அதை எப்படி குணப்படுத்துவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேனை வாய்ப்புண்ணுக்கு பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும். நம் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கக்கூடிய தேனில் ஆன்டி மைக்ரோபியல் குணம் உள்ளது. அதனால் தேன் எப்பேர்ப்பட்ட புண்ணையும் ஆற்றக்கூடிய தன்மையை கொண்டது. அது மட்டுமில்லாமல், புண்ணை சுற்றி நோய் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.

வீட்டிலேயே இருக்கக்கூடிய பேக்கிங் சோடாவுன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து அதை வாய்ப்புண் இருக்கக்கூடிய இடத்தில் தடவவும். பிறகு பேக்கிங் சோடா நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் வாயை கொப்பளித்து கழுவி விடவும். இதுபோன்று ஒரு நாளைக்கு மூன்று முறை செய்வது நல்லதாகும். பேக்கிங் சோடாவை சோடியம் பை கார்பனைட் என்றும் அழைப்பார்கள். இது வாய்ப்புண்ணையும் அதனால் ஏற்படும் வலியையும் சரி செய்ய உதவுகிறது.

அடுத்து வீட்டிலேயே இருக்கும் தேங்காய் எண்ணை வாய்ப்புண்ணுக்கு மகத்தான மருந்தாகும். இதற்கும் தேனை போன்றே ஆன்டி மைக்ரோபியல் குணம் உள்ளதால் வாய்ப்புண்ணை குணப்படுத்தும். வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணையை இரவில் தூங்குவதற்கு முன் தடவவும். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

உப்பில் ஆன்டிசெப்டிக் குணம் உள்ளதால் வெதுவெதுப்பான நீரில் உப்பை போட்டு நன்றாக அந்தத் தண்ணீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

டூத்பேஸ்ட்டை வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவுவதால் அதில் இருக்கும் ஆண்டி மைக்ரோபியல் குணம் வாய்ப்புண்ணை குணமாக்கும். இதை இரண்டு அல்லது மூன்று முறைகூட ஒரே நாளில் செய்யலாம். இப்படி செய்வதால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

ஆரஞ்சு ஜூஸ் அருந்துவதால் வாய்ப்புண் குணமாகும். ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நோய் தொற்றை போக்கக்கூடியதாகும்.

கிராம்பு எண்ணையை பல் வலி மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்னைக்கு பயன்படுத்துவார்கள். ஒரு சிறிய பஞ்சியில் கிராம்பு எண்ணையைத் தொட்டு வாய்ப்புண் இருக்கும் இடத்தில் வைத்தால் விரைவில் புண் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
நாம் பேசும் பேச்சே நமது இமேஜை உயர்த்தும்!
A simple home remedy to mouth sore!

தேங்காய் பாலை வாயில் வைத்து நன்றாகக் கொப்பளிப்பது வாய்ப்புண்ணிற்கு மிகவும் நல்லதாகும். இதை மூன்று அல்லது நான்கு முறை வைத்து வாய்க்கொப்பளிப்பதால் வலி மறைந்து புண் விரைவில் குணமாகும்.

மஞ்சளில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. மஞ்சள் சிறிது எடுத்து அத்துடன் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து வாய்ப்புண்ணின் மீது தடவுவதால் வலி குறைந்து புண் குணமாவதை கண்கூடாகக் காணலாம்.

இங்கு மேலே கூறிய அனைத்தும் வீட்டிலேயே இருக்கக்கூடிய மற்றும் நமக்கு சுலபமாகக் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகும். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பாருங்கள். ‘வாய்ப்புண் பிரச்னை இனி எனக்கு இல்லை’ என்று நீங்களே சொல்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com