
நுரையீரல் பலம் பெற
விழுதி இலைப் பொடியை வெந்நீருடன் கலந்து பருக, நுரையீரல்கள் அதிகமான நலத்தைப் பெறுகின்றன. இந்த அதிசய ஆற்றல் விழுதி இலைப்பொடிக்கு உண்டு. அதாவது வரையறுத்துக் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நுரையீரல் பெறுகிறது.நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே மாறிவிடும். இந்த மாற்றத்தை உணர்ந்து கொள்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும்.
ஒரு பயிற்சி முறை
விழுதி இலை (Vizhuthi leaf) நீரை பருகுவதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடிப்பாருங்கள். அடுத்த நாள் விழுதி இலை பொடி நீரைப் பருகி ஓடிப்பாருங்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை உணரலாம். முதல்நாள் ஓடும்போது களைப்பு ஏற்படும். அடுத்த நாள் களைப்பு குறைந்து விடும். ஒரு வார காலத்தில் ஓடினால் ஏற்படும் பெருமூச்சுடன் களைப்பும் நீங்கிவிடும்.
தினமும் இந்த வைத்திய முறையை கடைபிடிக்க, நுரையீரல் பலம் பெறுகிறது.
விழுதி இலை நீரை பருகிவர வாத பித்த கபம் மூன்றும் சமநிலை படுத்தப் படுகிறது.
விழுதி இலைப் பொடி நீரை பருக நரம்பு மண்டலம் பலம் பெறும்.
உடல் வெப்பம் தணியும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டை கர்ப்பக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
100 கிராம் விழுதி இலைப் பொடியுடன், பத்து கிராம் சீரகம் பொடி, பத்து கிராம் மிளகு பொடி மற்றும் 5 கிராம் மஞ்சள் பொடியுடன் கலந்து காலை, மாலை இருவேளை ஒரு மண்டலமாக பருகிவர உடலுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும்.
நம் வீட்டில் ரசம் வைக்கும் போது விழுதி இலைப் பொடி தூவி சாப்பிட உடலில் இருக்கும் வாத நீர்கள் வெளியேறி வாத நோய் வராமல் தடுக்கும்.
மூட்டுகளில் வாத நீர் சேர்வதால் மூட்டுவலி ஏற்படும். அந்த வாதநீரை விழுதி இலை (Vizhuthi leaf) வெளியேற்றும். விழுதி இலைகளை கைப்பிடி எடுத்து இடித்து சிறிது மிளகை சேர்த்து தூளாக்கிவிடவும். பிறகு சீரகம் பூண்டு சேர்த்து சிறிது விளக்கெண்ணையில் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து ரசம் தயாரித்து சாதத்தில் சேர்த்தோ அல்லது சூப் போன்று ஒரு மண்டலம் சாப்பிட மூட்டுவலி காணாமல் போகும்.
பாதங்களால் உண்டாகும் கட்டிகள் வீக்கங்கள் போன்றவற்றைக் கரைக்க விழுதி இலைகளை அரைத்து கட்டி மீது பற்று போட வேண்டும். இரண்டு வேளைகள் தடவி வர அவை குணமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)