ஒல்லியாவதற்கு சைவ உணவே போதும்! அது எப்படி?

A vegetarian diet is enough to lose weight. How is that?
A vegetarian diet is enough to lose weight. How is that?
Published on

ந்தியர்களின் உணவு முறையை எடுத்துக்கொண்டால் அதில் புரதத்தின் அளவு குறைவாகவே இருக்கும். ஒருவர் தனது எடையை இழப்பதற்கும், எடையைப் பராமரிப்பதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் தினசரி நமது உணவில் புரதம் இருப்பது அவசியம். அதிகம் புரதம் கொண்ட உணவுகளை நாம் எடுத்துக் கொண்டால், உடல் எடை நன்றாகப் பராமரிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். ஆனால், நாம் போதுமான புரதத்தை உட்கொள்ளாமல் இருப்பதால், அது பல பிரச்னைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்காதபோது, அதனால் செரிமானம், ஹார்மோன், நோய் எதிர்ப்புச் சக்தி, சர்க்கரை அளவு மாறுதல், எலும்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு எவ்வளவு புரதம் தேவை என்றால், நம் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 1 கிராம் புரதம் இலக்காகக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் 80 கிலோ எடையுள்ளவர் எனில், தினசரி 80 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிதானதாகும். நாம் சரியான உணவை தேர்வு செய்தால் நம் உடலுக்குத் தேவையான புரதத்தைப் பெறுவது மிகவும் சுலபம். ஆனால், பெரும்பாலும் அசைவ உணவுகளிலேயே புரதம் அதிகம் இருப்பதால், சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதத் தேவையை பூர்த்தி செய்வதில் கடினம் இருக்கலாம்.

ஆனால், உண்மை என்னவென்றால் அதிக புரதம் கொண்ட சைவ உணவுகளும் நிறைய இருக்கிறது. இதற்கான உணவுப் பட்டியலும் நீளமானது. உடல் எடையைக் குறைப்பதற்கு புரதம் ஏன் முக்கியமானது எனக் கூறுகிறார்கள் என்றால், புரதம் அதிகம் உள்ள உணவை சாப்பிட்ட பிறகு, நீண்ட நேரம் பசிக்காது. இதனால் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் வராது. இதனால் ஒரு நாளைக்கு ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளும் விகிதம் குறைவதால் உடல் எடை இழப்பு எளிதாக நிகழ்கிறது.

சைவ உணவு உண்பவர்கள் புரதம் நிறைந்த உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது கடினமாக இருந்தாலும், அது சாத்தியமற்றது அல்ல. அதிகம் புரதச்சத்து நிறைந்த சைவ உணவு அட்டவணை இதோ:

  • கீரை வகைகள்

  • முளைகட்டிய தானியங்கள்

  • முட்டை 

  • வெந்தயம்

  • பட்டாணி

  • பன்னீர்

  • டோஃபு

  • சோயாபீன்

  • வேர்க்கடலை

  • தயிர்

  • கொண்டைக்கடலை

  • சுண்டல் வகைகள்

  • ராஜ்மா

  • உலர் பழங்கள்

  • கொட்டை வகைகள்.

மேலே குறிப்பிட்டுள்ள உயர் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சைவ உணவுப் பிரியர்கள் தாராளமாக உண்ணலாம். இத்துடன் அதிக காய்கறிகளை உட்கொள்வது மேலும் புரதத்தை பெறுவதற்கு சிறந்த வழியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com