Shoulder pain
Shoulder pain

தேய்ந்து போகும் தோள்பட்டை... வலி தாங்காது... தீர்வு?

Published on

தோள்பட்டை வலி என்பது பொதுவாக தோள்பட்டையின் மூட்டு பகுதியில் அல்லது அதை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் வலியைக் குறிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் அறிகுறிகள் லேசானதாக இருந்து பிறகு படிப்படியாக அதிகரிக்கும். தோளும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் வீக்கம் அடைந்து வலியுடன் காணப்படும். இதனால் தினசரி வேலைகளில் பாதிப்பு உண்டாகும். கைகளை சரியாக அசைக்கக்கூட முடியாமல் இருப்பதும், தசையில் விறைப்பு மற்றும் வலி ஏற்படுவதும் கழுத்து கை மற்றும் முதுகுப் பகுதியில் வலி ஏற்படுவதும் என இருக்கும்.

தோள்பட்டை வலிக்கான காரணங்கள்:

a) வயது தொடர்பான பிரச்சனைகள்:

வயதான காலத்தில் வயதின் காரணமாக குருத்தெலும்பு மற்றும் தசை நாண்கள் சிதைவடையும் பொழுது தோள்பட்டையில் வலி ஏற்படலாம்.

b) காயம் ஏற்படுவது:

கீழே விழுந்து அடிபடும் பொழுது, விளையாடும் பொழுது அல்லது வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபடும் பொழுது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால் வலி உண்டாகும்.

c) தோள்பட்டைக்கு அதிகப்படியாக வேலை கொடுப்பது:

தோள்பட்டைக்கு அதிகப்படியான வேலை கொடுத்து பயன்படுத்தும் பொழுது அல்லது தவறான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வலி ஏற்படலாம்.

d) தேய்ந்து போவது:

தோள்பட்டை தேய்ந்து போய் வீக்கம் அடையும் போது தோள்பட்டை தசைநார் ஏற்படுகிறது.

e) மாரடைப்பு:

இடது தோள்பட்டையில் அதிகமான வலி மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

f) நரம்பு பிரச்சனை:

கழுத்து மற்றும் மேல் முதுகின் நரம்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனை காரணமாகவும் தோள்பட்டை வலி உண்டாகலாம்.

அறிகுறிகள்:

தோள்பட்டை வலி அதிகம் இருந்தாலோ, தோள்பட்டையில் வீக்கம் அதிகமாகவும், கைகளை அசைக்கும் பொழுது வலியும் ஏற்பட்டாலோ, தூங்கும் பொழுது வலியின் காரணமாக தூக்கம் தடைப்பட்டாலோ, தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

தீர்வுகள்:

a) வலி அதிகமாக இருப்பின் தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரண மருந்து மாத்திரைகள், ஆயின்மென்ட் போன்றவை உதவும்.

b) தோள்பட்டை தசைகளை வலுப்படுத்த உதவும் உடற்பயிற்சிகளை தகுந்த பிசியோதெரபிஸ்ட் மூலம் பயிற்சி பெற்று செய்வதும் தோள்பட்டையில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும்.

c) வலி இருக்கும் பொழுது உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். வலி இல்லாத சமயங்களில் உடற்பயிற்சிகளை செய்வது நல்ல பலன் தரும்.

d) கீழே விழுந்ததனால் காயம் உண்டானாலோ, விளையாடும் பொழுது அல்லது வேறு ஏதேனும் செயலின் போது தோள்பட்டையில் வலி உண்டானாலோ அதற்கு ஐஸ் பேக் ஒத்தடம் உதவும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை 10 நிமிடங்கள் வைத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

e) வீக்கம், வலியைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சத்தான கீரையில் சாதமும் கடைசலும்..!
Shoulder pain
logo
Kalki Online
kalkionline.com