
ஆடுதீண்டாப்பாளை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இதற்கு ஆடுதின்னாப்பாளை, வாத்துப்பூ, பங்கம்பாளை ஆகிய பெயர்களும் உண்டு. பொதுவாக வேலிக்காக பயன்படுத்தப்படும் இது, ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்தது.
வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும். இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.
ஆடுதீண்டாப்பாளையை நிழலில் உலர்த்தி, நன்றாக பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து, அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் விரைவில் நீங்கும்.
ஆடுதீண்டாப்பாளை இலைப் பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி வில்வ இலைப் பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான சுகப்பிரசவம் பெற ஆடுதீண்டாப்பாளை வேர் (2 கிராம்) எடுத்து பொடி செய்து தினந்தோறும் ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து ஒரு வேளை குடித்து வந்தால், ஆரோக்கியமான சுகப் பிரசவம் ஏற்படும்.
ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
ஆடுதீண்டாப் பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ழுங்கற்ற இரத்தப் போக்கு ஆகிய தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
பசுமையான ஆடுதீண்டாப்பாளை இலைகளை நசுக்கிப் பிழிந்து எடுத்த சாறு 50 மி.லி.யுடன் தேங்காயெண்ணெய் 50 மி.லி. சேர்த்து, நீர் வற்றும் வரை சுண்டக்காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மேல்பூச்சாகத் தடவி வர, தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகிய தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பட்டையை அரைத்து 5 கிராம் அளவு உண்டு வந்தால் சகல வித விஷங்களும் நொடியில் இறங்கிவிடும்.
கால் தேக்கரண்டி அளவு ஆடுதீண்டாப்பாளை இலைப் பொடியை வெந்நீருடன் கலந்து இரவில் அருந்தி வர, அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.