
கோடையில் சிலருக்கு சில நேரங்களில் செரிமானம் இல்லாமை, வயிறு உப்புசம், வாயு பிரச்னை, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு என பல பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக டயரியா எனப்படும் வயிற்றுப் போக்கு ஏற்பட உணவு தொற்றுகள், அலர்ஜி என பல காரணங்கள் இருக்கலாம். நம் உடல் ஏற்காத உணவுகள், மன அழுத்தம் இதனாலும் வயிறு சரி இல்லாமல் போகும்.
1. தேன் + இஞ்சி :
இஞ்சியில் எண்ணற்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ் அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வை தணித்து வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த செய்யும். இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக்கி நைசாக அரைத்து அதனுடன் தேன் கலந்து 1 ஸ்பூன் சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.
2. அரிசி கஞ்சி நீர் :
வயிற்றுப் போக்குக்கு சிறந்த தீர்வு அரிசி வடித்த கஞ்சி தான். இது வயிற்றை மென்மையாக்கும். இதனை குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. புதினா + உப்பு + சர்க்கரை :
வயிற்றுப் போக்கின் போது புதினா + உப்பு + சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீரில் பானமாக கலந்து குடித்தால் சரியாகும். உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவும்.
4. தயிர் :
வயிற்றுப் போக்கின் போது தயிர் அல்லது யோகர்ட் சாப்பிட்டால் நீங்கும். தயிர் ஒரு புரோபயாடிக். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.
5. எலுமிச்சை + உப்பு + சர்க்கரை:
இதனை தண்ணீரில கலந்து குடிப்பதால் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இழந்த நீர் சத்தை சமன்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்த உதவும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
6. பிளாக் டீ + எலுமிச்சை சாறு :
பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தாலும் வயிற்றுப் போக்கு நிற்கும்.
தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். வயிற்றுப் போக்கு அதிகமானால் உடனடியாக மருத்துவரை பார்க்கலாம்.