ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

Actor Manoj Heart Attack
Actor Manoj Heart Attack
Published on

மாரடைப்பு என்பது இதய தசைகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படும் ஒரு தீவிர மருத்துவ நிலையாகும். இது இதய திசுக்களில் சேதத்தை ஏற்படுத்தி இறப்புக்கு வழிவகுக்கும். மாரடைப்பு எந்த பாலினத்தவர்களையும் பாதிக்கலாம் என்றாலும் ஆண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரி வாருங்கள் இப்பதிவில் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை சற்று ஆராய்வோம். 

1. ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்று வயது. ஆண்களுக்கு வயதாகும்போது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 45 வயதுக்குப் பிறகு இதற்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. ஒவ்வொருவரின் வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 

2. ஒருவருக்கு மாரடைப்பு உட்பட இதய நோய்களின் ஆபத்தைத் தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோயின் குடும்ப வரலாறு, இதயம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே ஆண்கள் தங்களின் குடும்ப வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டியது அவசியம். 

3. உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் தமனிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, சேதத்தை உண்டாக்குகின்றன. எனவே தாமணிகள் சுருங்கும்போது அல்லது முழுவதுமாக அடைபடும்போது மாரடைப்புக்கு வழிவகுக்கும். ரத்த அழுத்தத்தை முறையாக கண்காணிப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் இத்தகைய பாதிப்பை நிர்வகிக்க முடியும். 

4. அதிக கொலஸ்ட்ரால் அளவு காரணமாக தமனிகளில் கொழுப்பு படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும். பெண்களை விட ஆண்களுக்கு LDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். எனவே ஆண்கள் முறையாக கொலஸ்ட்ரால் அளவை சரிபார்த்து, ஆரோக்கியமான உணவை பின்பற்றுவது மூலமாக மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம். 

5. அதிக உடல் எடை காரணமாகவும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். அதிக எடை இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு போன்ற நிலைமைகளை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாகும். 

6. சிகரெட் பிடிப்பது ஆண்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம். புகைப்பிடிப்பதால் தமனிகள் சேதமடைந்து ரத்த உறைவுக்கு வழிவகுக்கும். இதனால் இதயத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைந்து, ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. எனவே புகைப்பழக்கம் இருக்கும் ஆண்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். 

இதையும் படியுங்கள்:
Fake Paneer: போலி பனீரை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?
Actor Manoj Heart Attack

7. மேலும், நீரிழிவு, மன அழுத்தம் அதிகப்படியான மது அருந்துதல், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் தூக்கத்தில் மூச்சு திணறல் உள்ளிட்ட பல காரணிகள் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கு பங்களிக்கின்றன. எனவே ஆண்கள் பெண்களை விட தங்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எந்த கெட்ட பழக்கமும் இன்றி முறையானப் உணவு பழக்கத்தை பின்பற்றி வந்தாலே, மாரடைப்பு ஏற்படுவதன் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com