Fake Paneer: போலி பனீரை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?

Fake Paneer and Real Paneer
Fake Paneer

பனீர், ஒரு பாரம்பரிய இந்திய வகை சீஸ் ஆகும். இதைப் பயன்படுத்தி பல்வேறு விதமான சுவையான உணவுகளைத் தயாரிக்கலாம். அது பனீர் டிக்காவாக இருந்தாலும் சரி அல்லது க்ரீமி பனீர் பட்டர் மசாலாவாக இருந்தாலும் சரி, இதைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவின் சுவை மற்றும் அமைப்பை சிறப்பாக மாற்றுவதில் தரமான பனீர் முக்கிய அங்கம் வகிக்கிறது. இன்றைய காலத்தில் உணவுக் கலப்படங்கள் அதிகரித்து வருவதால், போலி பனீர் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பதிவில் போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. 

அமைப்பு: உண்மையான பனீர் சற்று உறுதியாக இருக்கும். அதை லேசாக அழுத்தினால் அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது மற்றும் விரைவில் உடைந்து போகாது. போலி பன்னீர் பெரும்பாலும் ரப்பர் அல்லது பஞ்சு போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இது செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிப்பதைக் குறிக்கிறது. மேலும் பனீர் ஒட்டும் அமைப்பில் இருந்தாலும் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். 

நிறம்: பயன்படுத்தப்படும் பாலைப் பொறுத்து பனீர் வெள்ளை அல்லது வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். போலி பன்னீர் இயற்கைக்கு மாறான அதிக வெண்மைத் தன்மையுடன் காணப்படும். இது வெண்மையாக்கும் கலவைகள் சேர்க்கப்பட்டதன் அறிகுறி. எனவே அதிக வெண்மை நிறத்தில் இருக்கும் பனீரை வாங்க வேண்டாம்.

வாசனை: உண்மையான பனீர் லேசான பால் வாசனையை வெளிப்படுத்தும். இதுவே போலி பனீர் சில கடுமையான வாசனைகளை வெளிப்படுத்தலாம். இது தரம் குறைந்த பொருட்கள்ப் பயன்படுத்தியுள்ளதைக் குறிக்கிறது. பனீர் வாசனை அதிகமாகவோ அல்லது மோசமான வாசனையாகவோ இருந்தால் அதைத் தவிர்ப்பது நல்லது. 

நீர் பரிசோதனை: பனீரின் நம்பகத்தன்மையைக் கண்டறிய நீர் பரிசோதனை செய்து பாருங்கள். ஒரு சிறிய துண்டு பனீரை எடுத்து தண்ணீரில் போடுங்கள். அது உண்மையான பன்னீராக இருந்தால் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். இதுவே போலி பனீர், மாவு பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், அது தண்ணீரில் கரைந்து போகலாம் அல்லது வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம். 

சுவை: சுவையான பனீர் சாப்பிடும்போது அது ஒரு இனிப்பு சுவையைக் கொடுக்கும். இதுவே போலி பனீர் செயற்கை சுவை கொண்டிருக்கும். சாப்பிடுவதற்கு ஒரு ரப்பர் போன்ற உணர்வைக் கொடுக்கும். இதை வைத்தும் போலி பனீரை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சத்தான பனீர் மசாலா தோசை செய்வது எப்படி?
Fake Paneer and Real Paneer

இப்படி பல வழிகளைப் பின்பற்றி போலி பனீரை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். அதேநேரம் போலி பன்னீர் வாங்கும் அபாயத்தைக் குறைக்க நம்பகமான மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பிரபலமாக இருக்கும் பிராண்டுகள் பொதுவாக தரத்திற்கு முன்னுரிமை அளிப்பதால், எப்போதும் நல்ல பிராண்ட் பனீர் வாங்குவது நல்லது. குறிப்பாக நீங்கள் இணையத்தில் வாங்குவதற்கு முன், பிறர் கொடுத்துள்ள ரிவியூகளை படித்து விட்டு வாங்குங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com