ஆல்பக்கோடாவை (Alpakoda Fruit) உலர்ந்த பிளம்ஸ் என்றும் சொல்லலாம். இது ரஷ்யாவை தாயகமாகக் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள், ரெட்டினால், இரும்புச்சத்து மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தில் ஒளிந்திருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நம் தோல் மற்றும் கூந்தலை நல்ல வலுவுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது
மேலும் இது நமக்கு வயதாகும் போது ஏற்படும் சுருக்கங்கள் உருவாவதை தாமதப்படுத்துகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
2010-ல் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 259 பேர்களுக்கு மூன்று குழுக்களாகப் பிரித்து அதில் இரண்டு குழுக்களுக்கு ஆல்பக்கோடா பழமும் மற்றும் அதன் சாறும் வெறும் வயிற்றில் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது குழுவுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. எட்டு வாரத்திற்கு பிறகு ஆல்பக்கோடா பழம் மற்றும் சாறு குடித்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. தண்ணீர் குடித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையவில்லை.
இதயத்தை பாதுகாக்கிறது
பொட்டாசியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது நமது இதயம் சரியான முறையில் செயல்படவும், நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் ஊக்குவிக்குகிறது. மயக்கம், மார்வலி இதய வியாதிகள் போன்ற பிரச்சனைகளை இது சரிசெய்கிறது. இப்பழம் இதய ஆரேக்கியத்தையும் காக்கிறது.
செரிமானத்தை சீர் செய்கிறது
இப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீர் செய்ய உதவுகிறது. இது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது. மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மலச்சிக்கல் ஏற்படாது. உணவு செரிமானம் ஆக உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் சி சத்து
எலும்புகள், தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் பற்கள் பலமாக இருக்க தேவையான வைட்டமின் சி சத்து இதில் அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொலாஜனை பலப்படுத்துகிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது
இப்பழத்தில் அதிகளவு ஃபினால்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இவை எலும்புகளை திடமாகவும், வலுவாகவும் வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.
கர்ப்பிணிகளுக்கு சிறந்தது
இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இப்பழத்தில் புளிப்பு இனிப்பு சத்து இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு வரும் வாந்தியை தடுக்கிறது.
காய்ச்சல்
காய்ச்சல் உள்ளவர்கள் இதை மென்று உட்கொள்ள காய்ச்சல் நீங்கும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு இப்பழத்தைத் கொடுக்க வேண்டும்.
வாந்தி
பயணங்களின் போது வாந்தி ஏற்படுவதைத் தடுக்க இப்பழத்தை உட்கொள்ளலாம்.