ஆல்ஃபா தலசீமியா பற்றித் தெரியுமா?

alpha thalassemia
alpha thalassemia
Published on

ஆல்ஃபா தலசீமியா என்பது பல ஆயிரக்கணக்கானவர்களை தாக்குகிறது‌. இதற்கு மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால் இதய பாதிப்பு, கல்லீரல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது.

ஆல்ஃபா தலசீமியா (alpha thalassemia) என்பது என்ன?

நம் உடலில் ஹீமோக்ளோபின் குறைபாட்டால் இந்த பிரச்னை ஏற்படுகிறது‌ HBS1 மற்றும் HBA2 போன்ற ஜீன்களின் குறைபாட்டால் இந்த பிரச்னை உருவாகிறது. இந்த ஜீன்கள் உடலில் ஹீமோக்ளோபினை சுரக்கச் செய்து ஆல்ஃபா க்ளோபினை உற்பத்தி செய்கிறது. இது குறையும் போது இரத்தமும் குறையும்‌ இதனால் அனீமியா என்ற இரத்தசோகை ஏற்பட்டு சோர்வும் பலவீனமும் ஏற்படும்.

ஆல்ஃபா தலசீமியாவில் நான்கு வகைகள் உண்டு‌

ஆல்ஃபா தலசீமியா (alpha thalassemia) சைலண்ட் கார்டியர்

இந்த வகையில் இரத்த பரிசோதனை எடுப்பது சிரமமாக இருக்கும்‌ மிகவும் இரத்த அணுக்கள் சிறிய அளவில் இருப்பதால் சோதனை நடத்துவது கடினமாகும்.

ஆல்ஃபா தலசீமியா கார்டியர்

இதில் இரண்டு ஜீன்கள் இழப்பினால் சிறிதளவு அனீமியா பிரச்னை ஏற்படும்

ஹீமோக்ளோபின். H.

இதில் மூன்று ஜீன்களின் இழப்பினால் ஒரே ஒரு ஜீன் மட்டுமே செயல்படும் நிலையில் பாதிப்பு உள்ளவர்களுக்கு இரத்தசோகை அதிகமாகும். மேலும் இப்பிரச்னை உள்ளவர்களுக்கு கல்லீரல் வீக்கம், மற்றும் மண்ணீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் கடினமாகும்.

ஆல்ஃபா தலசீமியா மேஜர்

நான்கு ஜீன்களின் செயலிழப்பால் இந்த பாதிப்பு ஏற்பட்டு கடுமையான அனீமியா கொன்றுவிடும் இந்த வகை பாதிப்பு ஆப்ரிக்கா, மற்றும் மேடிடெரேனியன் பகுதிகளில் அதிகம்.

இதையும் படியுங்கள்:
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் 8 பானங்கள்!
alpha thalassemia

ஆல்ஃபா தலசீமியா (alpha thalassemia) கண்டறிவது எப்படி ?

இரத்தப் பரிசோதனை மற்றும் ஜெனிடிக் அனாலிசிஸ் மூலம் கண்டறியப்படுகிறது. முதலில் முழுமையான இரத்த கௌண்ட் சோதனை நடத்தப்படுகிறது. இதில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை மற்றும் அளவு கண்டறியப்படுகிறது. இதை ஹீமோகாளோபின் எலெக்ட்ரோஃபோரெசிஸ் என்பர்.

ஆல்ஃபா தலசீமியா மருத்துவ சிகிச்சை வயது மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் தரப்படுகிறது. இரத்தத்தை எடுத்து வேறு இரத்தம் உள்ளே செலுத்தும் blood transfusion செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com