Amman Pacharisi Keerai
Amazing Benefits of Amman Pacharisi Keerai!

அம்மான் பச்சரிசி கீரையின் அற்புத பயன்கள்! 

Published on

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவ முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த அம்மான் பச்சரிசி கீரை. “சித்திரவல்லாதி” என்றும் அழைக்கப்படும் இக்கீரை தன்னுடைய துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. சாலை ஓரங்களிலும், தரிசு நிலப் பகுதிகளிலும் வளரக்கூடிய இந்த மூலிகை, பண்டைய காலங்களில் இருந்தே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பதிவில் அம்மான் பச்சரிசி கீரையின் ஆரோக்கிய நன்மைகளை விரிவாகக் காணலாம். 

அம்மான் பச்சரிசி கீரையின் ஆரோக்கிய நன்மைகள்: 

அம்மான் பச்சரிசி கீரை வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ சி இ மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற விட்டமின்களும், கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. 

இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது. 

அதிகப்படியான மாதவிடாய் வலி மற்றும் ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க, அம்மான் பச்சரிசி கீரையை சாப்பிடலாம். இக்கீரை கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்குவதோடு தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்க உதவுகிறது. 

அம்மான் பச்சரிசி கீரையில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தை வயதான தோட்டத்திலிருந்து பாதுகாத்து, முகப்பருக்கள் மற்றும் சரும நோய்களைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்தக் கீரையை அரைத்து தலையில் தடவினால் முடி வளர்ச்சியைத் தூண்டி, பொடுகைக் குறைக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
‘ஷாப்பிங் டிஸார்டர்’ எனப்படும் மன அழுத்தப் பிரச்னைக்கான காரணங்கள் தெரியுமா?
Amman Pacharisi Keerai

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதில் காணப்படும் சில மூலிகை சேர்மங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தக்கூடும். 

இப்படி, அம்மான் பச்சரிசி கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, வாரத்தில் ஒருமுறையாவது இந்தக் கீரையை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கீரையை நன்கு கழுவி சாறு எடுத்து குடிக்கலாம். அல்லது இலைகளை கூட்டு, பொரியல், ரசம் போன்றவற்றில் சேர்த்து சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

logo
Kalki Online
kalkionline.com