வெண்டைக்காய் நீரின் அற்புத நன்மைகள்... ஆரோக்கியம் மேம்படுத்தும் இயற்கை பானம்!

Okra Water
Okra Water

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்பும் அனைவருக்குமே, இயற்கை பல அற்புதமான உணவுகளை வழங்கியுள்ளது. அப்படி உடல் நலத்திற்கு ஏற்ற ஒரு இயற்கையான பானம்தான் ஓக்ரா நீர். அதாவது வெண்டைக்காய் தண்ணீர். ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த வெண்டைக்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு அற்புத பானமாகும். இந்தப் பதிவில் வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. 

ஊட்டச்சத்துக்கள்: வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே, பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற விட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. எனவே வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கும்போது எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நமக்குக் கிடைக்கிறது. வெண்டைக்காயை தண்ணீராக்கி குடிப்பதால் எல்லா ஊட்டச்சத்துக்களும் எளிதாக உறிஞ்ச வழிவகுக்கிறது.  இது உடலின் பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரித்து ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

ரத்த சர்க்கரையை நிர்வகிக்கும்: வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ச்சியாகக் குடித்து வருவதால் ரத்த சர்க்கரை அளவு நிர்வகிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான மண்டலத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் செயல்முறையை மெதுவாக்கும். இதனால் ரத்த குளுக்கோஸ் அளவு உடனடியாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் வெண்டைக்காய் நீரை மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

இதய ஆரோக்கியம்: இதில் நிறைந்துள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவுகிறது. வெண்டைக்காயில் உள்ள கறையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதால், உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் குறைகிறது. இதனால் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவு பராமரிக்கப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
Shell Shock: முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் சந்தித்த உளவியல் பாதிப்பு!
Okra Water

செரிமான ஆரோக்கியம்: ஓக்ரா நீர் செரிமான ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெண்டைக்காயில் காணப்படும் கொழகொழப்பான அமைப்பு, செரிமானத்திற்கு உதவி குடலின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. எனவே இந்தத் தண்ணீரை வழக்கமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் தடுக்கப்பட்டு செரிமான பிரச்சனைகள் நீங்குகிறது.  

எடை மேலாண்மை: நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவராக இருந்தால், வெண்டைக்காய் நீர், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அதை சாத்தியமாக்கலாம். இது நீண்ட நேரம் உங்களை வயிறு நிறைந்த உணர்வுடன் வைத்திருப்பதால், அதிக கலோரி உட்கொள்வது தடுக்கப்படுகிறது. மேலும் இதில் குறைந்த கலோரியே இருப்பதால், மற்ற சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைத் தருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com