வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை விலக்கி வைக்கும் அற்புத உணவுகள்! 

Amazing foods that keep viruses and bacteria Away.
Amazing foods that keep viruses and bacteria Away.
Published on

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் அவசியம். நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலை பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. சரியான உணவு, போதுமான தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் முக்கிய காரணிகளாகும். 

சில உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. அதாவது, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த இந்த உணவுகள் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்தப் பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில அற்புத உணவுகளைப் பற்றி பார்ப்போம். 

பூண்டு அதன் வலுவான நறுமணம் மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது. தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. இதில் இருக்கும் அல்லிசின் என்ற கலவை, வைரஸ் மற்றும் பாக்டீரியா இரண்டையும் எதிர்த்து போராட உதவும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

சிட்ரஸ் படங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற ஊட்டச்சத்தாகும். வைட்டமின் சி வெள்ளை ரத்தம் அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ப்ரோபயோடிக்களின் நல்ல ஆதாரமான தயிர், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளைப் பராமரிக்க உதவும். குடல் நுண்ணுயிர்கள் வலுவான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அவசியம். ஏனெனில், இது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ரசாயனம், சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக நோய் தொற்றுகள் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. 

இஞ்சி மற்றொரு சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட உணவு. இது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் உதவும். செரிமான அமைப்பை சரி செய்ய பயன்படுத்தப்படும் இஞ்சி, மறைமுகமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 

இதையும் படியுங்கள்:
கும்பகோணம் கடப்பா-பாலக் கீரை தொக்கு எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
Amazing foods that keep viruses and bacteria Away.

கீரை, முட்டைகோஸ் மற்றும் பிற பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். இந்த காய்கறிகள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக இருப்பதால் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி மற்றும் பிற பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. அவை உங்கள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவும். அவற்றில் விட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. 

இந்த சூப்பர் உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை மிகவும் திறம்பட எதிர்த்து போராடுவதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்க முடியும். ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பராமரிக்க ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com