நாம் உண்ணும் உணவுகள் நம் உடலில் எவ்வாறு செரிமானம் ஆகின்றன என்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக ரத்த சர்க்கரை அளவை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து நாம் அறிந்துகொள்வது அவசியம். இதில் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிளைசெமிக் குறியீடு என்பது ஒரு உணவில் உள்ள கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பதை குறிக்கும் அளவீடு.
குறைந்த கிளைசெமி குறியீடு கொண்ட உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்யும். இதனால், நீண்ட நேரம் நமக்கு பசிக்காமல் இருக்கும். பொதுவாகவே குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டவை விரைவாக நம் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படலாம்.
குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்:
பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, ஆரஞ்சு, திராட்சை.
காய்கறிகள்: கேரட், பச்சை பீன்ஸ், வெள்ளரிக்காய், ப்ரோக்கோலி, காலிஃபிளவர்.
தானியங்கள்: பழுப்பு அரிசி, ஓட்ஸ், குயினோவா, பார்லி.
பருப்புகள் மற்றும் விதைகள்: பாதாம், வால்நட், சியா விதைகள், புரோட்டீன் பவுடர்.
பால் பொருட்கள்: தயிர், பால்.
மீன் மற்றும் கோழி: சால்மன் மீன், சிக்கன்.
குறைந்த கிளைசெமி குறியீடு கொண்ட உணவுகளின் நன்மைகள்:
இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்வதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கிளைசெமி குறியீடு கொண்ட உணவுகள் நீண்ட நேரம் நிறைவான உணர்வைத் தருவதால், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு எடையை இழக்க உதவும். இந்த உணவுகள் ரத்த கொழுப்பை குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இவை நீண்ட நேரம் ஆற்றலை வழங்கி, நாள் முழுவதும் உற்சாகமாக நம்மை வைத்திருக்க உதவும்.
குறைந்த கிளைசெமி குறியீடு கொண்ட உணவுகள் நம் உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமானவை. எனவே, மேலே குறிப்பிட்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடவும்.