தாமரை விதையில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தாமரை விதைகளை போன்றே தாமரை வேரிலும் அற்புதமான பல மருத்துவ பயன்கள் உள்ளன. சுவாச பிரச்சனைகள் தொடங்கி ரத்த அழுத்தம் வரை சரி செய்யக்கூடிய தாமரை வேரின் மருத்துவ பயன்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதனை பலரும் தாமரை தண்டு, தாமரை வேர் என வெவ்வேறாக அழைப்பர். தண்டு, வேர் இரண்டும் ஒன்றே. தாமரை வேரில் அதிக அளவிலான நார் சத்துக்களும் புரதச் சத்துக்களும் உள்ளன. இதனால் இது செரிமான பிரச்சனைகளை சீர் செய்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் சுவாசப் பிரச்சினைகளான சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்வதற்கு தாமரை வேர் பயன்படுகிறது.
தாமரை வேரில் அதிக அளவிலான கலோரிகள் உள்ளன. எனவே இது முதுமை அடைவதை தடுத்து உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிக அளவிலான மாவுச்சத்து, புரதம், கனிமம் மற்றும் பல வேதிப்பொருட்கள் உள்ளதால் குளிர்ச்சி நிறைந்ததாகவும், வயிறு மற்றும் உடலில் உள்ள வெப்பத்தினை குறைக்கவும் பயன்படுகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் இதனை சாப்பிடும் போது வயிற்றில் தங்கியுள்ள மாதவிடாய் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.
மேலும் தோல் நோய்களான சொறி, சிரங்கு, அழற்சி போன்றுவற்றை சரி செய்வதற்கும் காய்ச்சல், இருமல், சளி தும்மல் போன்ற குளிர்கால நோய்களை சரி செய்வதற்கும் இது பயன்படுகிறது. தாமரை வேரில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்பு சத்து குறைபாட்டை நீக்க முடியும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் உடலில் உள்ள திரவங்களுக்கு இடையேயான சமநிலையை உறுதி செய்து ரத்த ஓட்டத்தினை சீராக்க உதவுகிறது.
தாமரை வேரில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் பி6, துத்தநாகம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. இதனால் இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தாமரை வேரில் உள்ள போலேட் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்க உதவுவதால் கருவில் உருவாகும் பிறப்பு குறைபாடுகளை சரி செய்ய இது உதவுகிறது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியால் அவதிப்படுபவர்கள் தாமரை வேரினை உணவாக எடுத்துக் கொள்ளும் போது இத்தகைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல நாளடைவில் சரி செய்யப்படுகிறது. தாமரை வேரானது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இது தமனிகளில் ஏற்படும் அடைப்பை சரி செய்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியான மனநிலையை கொடுக்கிறது.
இவ்வளவு அற்புதமான பலன்கள் நிறைந்த தாமரை வேரினை குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவில் சேர்த்துக் கொள்ளுவது மிகவும் நன்று. தாமரை வேரானது தற்போது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.