இதை மட்டும் செய்தால் போதும்... மருத்துவர்களுக்கே வேலை இருக்காது! முன்னோர்களின் ரகசியப் பட்டியல்!

முன்னோர் பரிந்துரைத்த இயற்கை உணவுகள் மூளை, கண், பல், நரம்பு, ரத்தம், சருமம், நுரையீரல், இதயம், வயிறு, கல்லீரல், குடல், பாதம் ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் வழிகள்
Ancient Tamil Remedies
Ancient Tamil RemediesCredit: AI Image
Updated on

1. மூளை

  • கறிவேப்பிலை துவையல்: கறிவேப்பிலை துவையலைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டுவர மூளையின் செயல்பாடு சீராகும்.

  • மருதாணி: குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கையில் மருதாணி வைக்க வேண்டும்; அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வு தரும்‌.

  • வல்லாரைக் கீரை: வல்லாரைக் கீரையை நெய்யில் வதக்கிச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட ஞாபகசக்தி அதிகரிக்கும்.

  • தேங்காய்: தினசரி இரண்டு தேங்காய் துண்டுகளை மென்று தின்பதால் மூளையில் புண்கள் ஏதும் வராது.

2. கண்கள்

  • குங்குமப்பூ பால்: பாலுடன் குங்குமப்பூ சேர்த்து வாரமொருமுறை குடிப்பது கண்களுக்கு நல்லது‌.

  • பழங்கள்: தினமும் 50 கிராம் மாம்பழம் அல்லது பப்பாளிப் பழம் உண்ண கண் பார்வை மேம்படும்.

  • கீரைகள்: அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட கண்கள் குளிர்ச்சி அடையும்‌. பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளப் பார்வைத் திறன் மேம்படும்.

  • இயற்கை உணவுகள்: தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர கண் பிரச்சினைகள் வராது. வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதும் கண்களுக்கு நல்லது. மேலும், தினமும் 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வரப் பார்வை பலப்படும்.

3. பற்கள்

  • கோவைப்பழம்: கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் பல் பிரச்சினைகள் வராது.

  • செவ்வாழை: செவ்வாழைப்பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வரப் பல் சொத்தை வராது‌.

  • பல் பலப்பட: பற்கள் உறுதியாக இருக்கக் கரும்பு, கேரட், ஆப்பிள் போன்றவற்றை நன்றாக மென்று உண்ண வேண்டும்.

4. நரம்புகள்

  • சேப்பங்கிழங்கு: சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நரம்புகள் வலுப்பெறும்.

  • இலந்தைப்பழம்: இலந்தைப்பழம் சாப்பிட்டு வர நரம்புகள் நல்ல பலம் பெறும்.

  • கரிசலாங்கண்ணி: கரிசலாங்கண்ணிக் கீரை நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது‌.

5. ரத்தம்

  • பீட்ரூட் & திராட்சை: வாரம் 2 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வரப் புதிய ரத்தம் உற்பத்தியாகும்‌. திராட்சை பழச்சாறு (ஜூஸ்) சாப்பிட ரத்தம் பெருகும்.

  • விளாம்பழம்: அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

  • தயிர்: தினமும் ஒரு கப் தயிர் உட்கொள்ள ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும்‌.

  • சீரக நீர்: இரண்டு லிட்டர் நீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைத்து, அந்த நீரைத் தொடர்ந்து பருகி வர ரத்தம் சுத்தமாகும்.

6. சருமம்

  • பானங்கள்: சரும ஆரோக்கியத்திற்கு ஆவாரம்பூ டீ மற்றும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.

  • முட்டைகோஸ் சாறு: முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கங்கள் மறையும்.

  • சந்தனக் கலவை: சந்தனத்தை இழைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசி வர முகம் பிரகாசமாகும்.

  • அருகம்புல் சாறு: அருகம்புல் சாற்றில் வெல்லம் சேர்த்துத் குடித்து வரச் சருமம் பளபளப்பாகும்.

7. நுரையீரல் மற்றும் இதயம்

  • தேன் நெல்லி: தேனில் ஊறவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வர நுரையீரல் மற்றும் இதயம் பலப்படும்.

  • ரோஜா லேகியம்: ரோஜாப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட இதயம் பலமாகும்.

  • இஞ்சி: இஞ்சிச் சாறு குடிப்பது அல்லது இஞ்சி மொரப்பா சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக்கும்.

  • சுண்டை வற்றல்: உணவில் சுண்டை வற்றலைச் சேர்த்து வர நுரையீரல் பலமாக இருக்கும்.

  • கருப்பு திராட்சை: கருப்பு திராட்சைப்பழம் சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும்.

  • நல்ல கொழுப்பு: ஆளிவிதை (Flaxseeds), பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா-3 நல்ல கொழுப்பு இருப்பதால் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் வராது.

8. வயிறு

  • வெந்தயம் & தயிர்: காலையில் ஊறவைத்த வெந்தயத்தையும் தயிரையும் சேர்த்து உட்கொள்ள வயிறு சுத்தமாகும்.

  • மாதுளம்பூ டீ: மாதுளம்பூவை நீர்விட்டுக்கொதிக்க வைத்துத் தேநீராக்கிக் குடிக்க வயிற்றுப் பிரச்சினைகள் நீங்கும்.

  • மோர்: பொடித்த சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

  • தேங்காய்ப்பால்: வாரத்தில் இரண்டு நாட்கள் தேங்காய்பாலுடன் கருப்பட்டி சேர்த்து உண்ண வயிறு தொடர்பான புண்கள் மற்றும் பிரச்சினைகள் வராது.

  • கொள்ளு ரசம்: வாரம் ஒரு முறை கொள்ளு ரசம் வைக்கச் சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

9. கல்லீரல் மற்றும் மண்ணீரல்

  • வேப்பம்பூ: மாதத்தில் இரண்டு நாட்கள் வேப்பம்பூ ரசம் வைத்து உண்ணுங்கள்; இது உடலுக்குச் சிறந்த கிருமிநாசினி.

  • திராட்சை: திராட்சை பழச்சாற்றை அடிக்கடி அருந்தி வர கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆரோக்கியம் பெறும்.

இதையும் படியுங்கள்:
பன நுங்குவின் மகத்துவங்கள்: ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு சுலபமான வழி!
Ancient Tamil Remedies

10. மலக்குடல்

  • அகத்திக்கீரை: வாரம் ஒருநாள் அகத்திக்கீரை சாப்பிட மலக்குடல் சுத்தமாகும் (மலச்சிக்கல் தீரும்).

  • முளைக்கீரை: அடிக்கடி உணவில் முளைக்கீரை சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • பழங்கள்: மாலை ஆறு மணி அளவில் மாம்பழம் சாப்பிடலாம். பப்பாளிப் பழத்தை வாரம் 3 முறை உண்பது மலக்குடலைத் தூய்மையாக வைத்திருக்க உதவும்.

11. பாதம்

  • எண்ணெய்க் கலவை: விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து பாதங்களில் தடவி வரப் பாதம் மென்மையாகும்; பித்தவெடிப்பு நீங்கும்.

  • வேப்பெண்ணெய்: வேப்பெண்ணெயைக் கால் விரலிடுக்குகளில் தடவி வரச் சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.

  • வாழைப்பூ: வாழைப்பூவைச் சமைத்துச் சாப்பிடக் கை, கால் எரிச்சல் நீங்கும்‌.

    ஆக, நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்தச் சின்னச் சின்ன இயற்கை உணவுகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கையாள்வதே, நம் உடலை நோயின்றிப் பாதுகாக்கும்(ancient-tamil-remedies-organ-health) உன்னதமான செயலாகும்!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com