வாய்வு கோளாறுகளுக்கு நிவாரணம் தரும் சோம்பு!

Anise
Anisehttps://mediyaan.com

சோம்பு, ‘போனி குலம்’ இனத்தைச் சேர்ந்த கேரட் குடும்பத்தில் ஒரு பூக்கும் தாவரம். உலர்ந்த மண்ணில் வளரும் தாவரம். பொதுவாக, மசாலா பொருட்கள் இயற்கையில் சூடாக இருக்கும். ஆனால், சோம்பு மட்டுமே குளிர்ச்சி மற்றும் இனிப்பு பண்புகள் கொண்டது. சோம்பு சாத்வீக குணம் கொண்டதால் மனதை புத்துணர்ச்சியடைய செய்கிறது.

உலகிலேயே சோம்பு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இங்கு சோம்புவை சாப்பாட்டிற்கு பிறகு கொஞ்சம் மெல்லுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காரணம் செரிமானம் துரிதப்படுத்தும் என்பதால். சோம்பில் வைட்டமின் கே, ஈ, சி, மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இவை ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால் முகப்பரு மற்றும் சருமப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.

சோம்பு டையூரிடிக் ஆக செயல்பட்டு உடலிலிருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற உதவுகிறது. சோம்புவிலுள்ள அதென்தோல், பென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற அத்தியாவசியமான எண்ணெய்கள் உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்டது. இது மாதவிடாய் கோளாறுகளை சரியாக்கும். இதிலுள்ள அதென்தோல் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவுகிறது.

இதனை வாயிலிட்டு மென்றால் உடல் சூடு குறையும், கண் பார்வை சீராகும், கோடையில் ஏற்படும் செரிமான பிரச்னைகள் சரிசெய்யும். வயிற்று உபாதைகள் சரி செய்யும். செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் சோம்பு, வயிற்றுப்போக்கு, வயிறு வலி, குமட்டல் மற்றும் அஜீரணத்திற்கு மருந்தாக இருப்பதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.

இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் செரிமான சாறுகளின் சுரப்பை அதிகரித்து வாய்வு பிரச்னை, செரிமான பிரச்னையை தீர்க்கின்றது. மேலும் இருமல், தொண்டடை புண், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றது.

இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை எதிர்த்துப் போராடுகின்றது. ஆனால், அதிகப்படியான சோம்பு உட்கொள்வது வயிற்றுப் போக்கு மற்றும் குமட்டல் பிரச்னையை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் சோம்பு உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!
Anise

சோம்பு (பெருஞ்சீரகம்) விதைகளில் உள்ள பண்புகள் வாய்வ மற்றும் வயிற்று உப்புசத்தை குறைத்து கேஸ்ட்ரிக் அசௌகரியத்தில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதற்கு நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டீஸ்பூன் சோம்பு விதைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் இடித்த சோம்பு விதைகளை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி பருகலாம். இந்த ஹெர்பல் டீ செரிமானத்தை மேம்படுத்தி, அசிடிட்டி பிரச்னையை குறைக்கும்.

சோம்பு இதய நலம் காக்கும், GERD பிரச்னைக்கு நிவாரணம் தருகிறது. இதிலுள்ள நறுமணம் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்பு வாய் நாற்றம் தவிர்க்க உதவுகிறது, காலையில் கைப்பிடி அளவு மென்று தின்றால் வாய் நாற்றம் மறையும். இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. கல்லீரல் பணி சிறக்கவும் இது உதவுகிறது.  இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு, ஈரல் கேன்சர் செல்களையும் அழிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com