நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தி, பாதுகாப்பாய் வைத்திருப்பதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இயற்கை உணவுகள் மற்றும் பழங்களில் அதிகமாக உள்ளதால் இவற்றை தேவையான அளவு சாப்பிட உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றை வராமல் தடுக்கலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பசலைக் கீரையில் அதிகமாய் உள்ளது. இதில் கரோட்டினாய்டு இருப்பதால் மூளையில் ஏற்படும் பிரச்னைகளையும், அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் வராமலும் தடுக்கும்.
பீட்ரூட்டில் வைட்டமின்கள், புரோட்டீன், தாது சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதோடு, உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும்.
புரோக்கோலியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்றி, உடலின் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் செய்வதில் சிறப்பாக செயல்படும்.
பெர்ரி பழங்களில் வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, கழிவுகளை சுலபமாக வெளியேற்றும்.
தக்காளியில் லைகோபைன் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், உடலைத் தாக்கும் கிருமிகளை அழிப்பதோடு, கொழுப்புகள் வருவதைத் தடுத்து உடல் எடையையும் குறைக்கும்.
ஆரஞ்சு, மாதுளம் பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது வயிற்றுப் புண்கள் வருவதைத் தடுக்கும். தினமும் ஒரு பழச்சாறு குடித்து வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆப்பிளிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. ஒரு கப் கிரீன் டீயில் 436 கிராம் உள்ளதால் இது உடல் நோய்களை எதிர்த்துப் போராடும். கிரீன் டீ உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.
பிளாக் டீயிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இதில் 239 மி.கிராம் அளவு நிறைந்துள்ளதால் இதில் நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. இவை தவிர, முட்டைக்கோஸ், குடை மிளகாய், புதினா, நெல்லி, சோயா பீன்ஸ், பாசிப்பயறு, கொண்டைக்கடலை என அனைத்திலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி ஆரோக்கியமாய் வாழலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்களை தினசரி உணவில் சேர்த்து உடல் நலனைப் பாதுகாப்போம்.