நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்ட... இதோ உங்களுக்கான மேஜிக் 'டீ' லிஸ்ட்!

ஆரோக்கியம் தரக்கூடிய ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த 6 தேனீர் வகைகள் (Antioxidant-rich teas) குறித்து இப்பதிவில் காண்போம்
Antioxidant-rich teas
Antioxidant-rich teas

ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உடல் அழற்சியைப் போக்கக் கூடியது. அத்தகைய ஆரோக்கியம் தரக்கூடிய ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த 6 தேனீர் வகைகள் (Antioxidant-rich teas) குறித்து இப்பதிவில் காண்போம்

1. ப்ளாக் டீ

Black tea
Black tea

உலகில் பெரும்பாலோர் குடிக்கக்கூடியது‌ ப்ளாக் டீ. பச்சை, வெள்ளை மற்றும் ஊலாங் டீ வகைகள் எல்லாமே காமெடியா சைனென்சிஸ் என்ற செடியிலிருந்து கிடைக்கிறது. ப்ளாக் டீ இலைகள் புளிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக அளவு பாலிஃபினால்கள் உள்ளன. மேலும் ஃப்ளேவினாய்டு, காடெசின் மற்றும் தியாஃப்ளேவின்களும் உள்ளன. அதனால் இவை முழுமையாக ஆக்சிடைஸ் ஆகிறது‌ இதை உட்கொள்வதால் மாரடைப்பு, நீரிழிவு இவற்றைத் தடுக்கிறது.

2. க்ரீன் டீ

Green tea
Green tea

இது டீ உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதிலும், இரத்தச் சர்க்கரையை குறைப்பதிலும், அழற்சியையும் நீக்குகிறது. இது ஃப்ரெஷ்ஷாக இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் காடேசின் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது‌. எபிகாலோகாடெசின் 3 என்ற பாலிஃபினால் இதில் அதிக அளவு உள்ளதால் அழற்சி, புற்றுநோய் நரம்பு மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. இது குளிர்ச்சியாகவும், சூடாகவும் அருந்தலாம்.

3. செம்பருத்தி டீ

hibiscus tea
hibiscus tea

இந்த செம்பருத்தி தேனீர் பல நன்மைகளைக் கொண்டது. இதய ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவை குறைக்கவும் மற்றும் எடைக்குறைப்புக்கும் மிகச் சிறந்தது‌. இதில் ஆன்தோசயானின் மற்றும் க்வெர்சாடின் போன்ற ஃப்ளேவினாய்டுகள் உள்ளதால் கெட்ட கொலஸ்டிரால் குறைக்கவும் ட்ரைக்ளிசரைடை குறைக்கவும் பயன்படுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியதாகும். காஃபீன் இல்லாததால் உடலுக்கு ஆரோக்கியமானது.

4. ஊலாங் டீ

Oolong tea
Oolong tea

இது சீன தேனீர் வகைக்களில் ஒன்று. இது பாதியளவு புளிக்கப்படுவதால் ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் இருக்கக் கூடிய ஆன்டி ஆக்சிடண்டுகளும் நிறைந்துள்ளன. இந்த ஊலாங் தேனீர் உட்கொள்வதன் மூலம் உடல் எடைக்குறைய வாய்ப்புண்டு‌. அதுமட்டுமல்லாமல் இந்த தேனீரில் உள்ளது‌ தியானைன் என்ற அமைனோ அமிலம் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. பதட்டத்தைப் குறைத்து நல்ல சக்தியைத் தரக்கூடியது. சோர்வை நீக்கி புத்துணர்வை தரக்கூடியது‌. இந்த தேனீரை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்க, மூளை செயல்பாடு மிகச் சிறந்த நிலையில் இருக்கும்.

5. வெள்ளை டீ

White tea
White tea

இது சீனாவில் மிகப் புகழ் பெற்ற தேனீராகும். இளம் தேயிலை இலைகள் பறிக்கப்பட்டு ஆவியில் வைக்கப்பட்ட பின் பொடியாக்கி பயன்படுத்தப்படுகிறது‌. இது காடெசின், ஃப்ளேவினாய்டு மற்றும் தியாஃப்ளேவின்கள் நிறைந்தது. இந்த வெள்ளை டீயில் மற்ற தேனீர்களை விட அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. இதில் கேஃபின் குறைந்த அளவே உள்ளது‌ . இந்த தேனீரில் கொழுப்புச்சத்து மற்றும் ட்ரைக்ளிசரைடுகள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. பூக்களின் சுவையைக் கொண்ட இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ உட்கொள்ளலாம்.

6. ரூயிபாஸ் தேனீர்

rooibos tea
rooibos tea

இந்த தேனீர் வகை என்பது ஆஸ்பலாதஸ் லைனெரிஸ் என்ற செடியிலிருந்து எடுத்து தயாரிக்கப்படுகிறது. இது காஃபீன் இல்லாததாக கருதப்படுகிறது. இதில் உள்ள பாலிஃபினால்களான ஆஸ்பலாதின் மற்றும் க்வெர்செடின் உள்ளன. இவை அழற்சியைப் போக்க கூடிய பண்பும், இரத்தச் சர்க்கரையைக் குறைக்கக் கூடியதாகவும் உள்ளது. இது சாக்லேட் மற்றும் வெண்ணிலா சுவையிலும் கிடைக்கிறது

7. ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் பயன்கள்

antioxidant
antioxidant

இது ஃப்ரீ ராடிகல்களின் அழுத்தத்தை போக்கக் கூடியது‌ உடல் நச்சுக்களை நீக்கிய கூடியது. இதன் காரணமாகவே ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த ஆரோக்கியமான டீ வகைகளை பரிந்துரைக்கிறார்கள்‌.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com